முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட சில பொருள்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      பிரத்யேகமான      பொது      உலகம்
THUMB-NEW

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலை ரூ.213 கோடிக்கு விற்பனை

1920களில் சில கட்டுமான பொறியாளர்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டு கால பழமையான சிலை ஒன்றை கண்டெடுத்தனர். இது பண்டைய ரோமானியாவைச் சேர்ந்த பித்தனை சிலை. ஹெலனிஸ்டிக் கால கட்டத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த சிலை மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருந்தது. இந்த சிலை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. அடையாளம் தெரியாத ஒருவரால் 28 மில்லியன் டாலருக்கு அதாவது ரூ.213 கோடிக்கு விலைக்கு வாங்கினார்.


roman era statue


டாவின்சியின் குறிப்புகளை ரூ.229 கோடிக்கு வாங்கிய பில் கேட்ஸ்

லியோனார்டோ டாவின்சியின் ஓவியங்கள் மட்டுமல்ல அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளுக்கும் அதிக கிராக்கி உண்டு. ஓவியங்கள் வரைவது குறித்த தொழில் நுட்பங்கள் குறித்து டாவின்சி எழுதிய குறிப்புகளை பிரபல தொழில் அதிபர் பில் கேட்ஸ் 30.8 மில்லியன் டாலருக்கு அதாவது ரூ.229 கோடிக்கு வாங்கினார். இந்த குறிப்புகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டிருக்கும். இதை படிப்பவருக்கு ஒரு கண்ணாடி கட்டாயம் அவசியம். இதை ஆராய்ச்சி ரகசியத்துக்காக அவர் இவ்வாறு இதை எழுதியிருக்கலாம் என பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் இதுதான் அவருடைய ஸ்டைல்.

da vinci code

ரூ.251 கோடிக்கு விற்பனையான கார்பெட்

மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் கடந்த 17 ஆம் நூற்றாண்டு உருவாக்கப்பட்ட கிளார்க் சிக்கில் லீப் கார்பெட் என்று பெயரிடப்பட்ட அந்த கார்பெட் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 33 மில்லியன் டாலருக்கு அதாவது 251 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. வாஷிங்டனில் உள்ள கார்கோரன் ஆர்ட் கேலரியால் இந்த காா்பெட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வெறும் தொலைபேசி மூலமாகவே அடையாளம் தெரிவித்துக் கொள்ள விரும்பாத வாடிக்கையாளர் ஒருவர் இதை இத்தனை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

carpet

ரூ.268 கோடிக்கு விற்பனையான அரசியின் ஆபரணம்

பிரான்ஸ் நாட்டின் அரசரான கிங் 16 ஆம் லூயி. இவரது மனைவி மேரி அண்டோய்நெட்டி. இவர் கழுத்தில் அணிந்திருந்த பென்டன்ட் என்ற ஆபரணம் தான் கடந்த 2018 இல் நடைபெற்ற ஏலத்தின் போது ரூ.268 கோடிக்கு அதாவது 36 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. ஒரு பெடன்டன் இத்தனை அதிக விலைக்கு விற்பனையானது இதுதான் முதன் முறையாகும்.

diamond jewellery

ரூ.273 கோடிக்கு விற்பனையான பேட்மின்டன் கேபினட்

இதை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.  உலகிலேயே பேட்மின்டன் கேபினட் அதிக விலைக்கு விற்பனையாகும் என யாராவது எதிர்பார்த்திருப்பார்களா..  ஆனால் அதுதான் உண்மை. 30 வகையான கலை வேலைப்பாடுகளுடன் மரத்தால் செய்யப்பட்ட இந்த கேபினட்டை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் பிடித்தன. இது இத்தாலியில் தயாரிக்கப்பட்டு தற்போது வியன்னாவில் உள்ள Liechtenstein Museum இல் உள்ளது. இந்த மியூசியத்தின் இயக்குநரான டாக்டர் ஜோகன் கிரேஃப்னெருக்குத்தான் ரூ.273 கோடிக்கு அதாவது 36.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

wooden cupboard

ரூ.330 கோடிக்கு விற்பனையாகி அசத்திய ஓவியம்

மீண்டும் நாம் ஓவியத்துக்குத் தான் வரவேண்டியுள்ளது.  இதன் மூலம் உலகிலேயே ஓவியங்கள் தான் அதிக மதிப்புடையவையாக கருதப்படுவது மிகுந்த ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றுதான். பெண் ஓவியரான ஜியோர்ஜியா ஓ கீபே என்பவர் வரைந்த வெள்ளை மலர் என்ற பெயரிடப்பட்ட ஓவியமம்தான் கடந்த 2014 இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 44 மில்லியன் டாலர் அதாவது ரூ.330 கோடிக்கு விற்பனையானது.

georgia-o-keeffe.jpg

ரூ.357 கோடிக்கு விற்பனையான கார்

Ferrari 250 GTO Berlinetta என்ற கார் பழம்பெருமை வாய்ந்த காராக கருதப்படுகிறது. இந்த கார் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டது. இந்த கார் அதே ஆண்டில் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன்  பட்டத்தையும் வென்றது. இந்த மாடல் வெறும் 36 எண்ணிக்கைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. கார் ஆர்வலர்களிடம் இந்த காருக்கு அளவில்லாத மதிப்பு உள்ளது. 2021 ஆண் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில்தான் 48.4 மில்லியன் டாலர் அதாவது ரூ.357 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

ferrari gto

ரூ.428 கோடி ரூபாய்க்கு விற்பனையான நீல வைரக் கல்

உலகில் எத்தனையோ வைரங்கள் இருந்தாலும் ஒரு சில வைரங்கள் மட்டும் அரிதானவையாக கருதப்படுகின்றன. அப்படி ஒன்றுதான் நீல நிற வைரக்கல். இதன் எடை 14.62 கேரட் எடை கொண்டதாகும். ஆபரண விற்பனையிலேயே முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக விலைக்கு விற்பனையானதாக இந்த நீல வைரம் மிளிர்கிறது. இந்த வைரத்துக்கு அதன் முந்தைய உரிமையாளரான சர் பிலிப் ஓப்பன்ஹைமர் என பெயரிடப்பட்டது. அவரது குடும்பம் பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமான டி பீர்ஸ் என்ற வைர நிறுவனத்தை நடத்தி வந்தது. 2016 இல் ஜெனீவாவில் நடைபெற்றர ஏலத்தின் போதுதான் இந்த நீல நிற வைரம் 57.5 மில்லியன் டாலர் அதாவது 428 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

blue diamond

ரூ.672 கோடிக்கு விற்பனையான மற்றொரு ஓவியம்

பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் டேவிட் ஹாக்னே என்பவர் தீட்டிய ஓவியம் நீச்சல் குளத்தில் இருவர் என்ற ஓவியம். கடந்த 2018 இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் இந்த ஓவியம் ரூ.672 கோடிக்கு அதாவது 90.3 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.

David hockney art

ரூ.678 கோடிக்கு விற்பனையான பிளாஸ்டிக் சிற்பம்

பார்க்க சாதாரண பிளாஸ்டிக் பொம்மை போல காட்சியளிக்கும் இதற்கா இவ்வளவு தொகை என்று வாயை பிளக்கத் தோன்றுகிறது அல்லவா. இதை உருவாக்கிய அமெரிக்க பிளாஸ்டிக் சிற்பி ஜெப் கூன்ஸ் கடந்த 2019 இல் இதை 91.1 மில்லியன் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.678 கோடிக்கு விற்பனை செய்தார். இதை வாங்கியவர் யார் என்பதை வெளியிட்டுக் கொள்ள ஏல நிறுவனம் விரும்பவில்லை.

Jeff koons

ரூ.1050 கோடிக்கு விற்பனையான சிற்பம்

சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜியாகோமெட்டி என்பவர் உருவாக்கிய சிற்பம் பாயின்டிங் மேன் என்பதாகும். ஒரு ஒல்லியான மனிதனை சித்தரிப்பதை போன்ற ஒரு ஆள் சைஸ் உள்ள நவீன சிற்பமாகும். இந்த சிற்பம் நியூயார்க்கில் 2017 இல் நடைபெற்ற ஏலத்தில் ரூ.141 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1050 கோடிக்கு விற்பனையானது. இங்குதான் பல்வேறு பிரபல கலைப் பொருள்கள் அதிக விற்பனைக்கு விற்பனையாகி சாதனை படைத்து வருகின்றன. இந்த சிற்பத்தை வரை மேலும் ஒரு சிறப்பு அம்சம் என்ன தெரியுமா.. ஒரே இரவில் இந்த சிற்பத்தை அந்த சுவிஸ் சிற்பி செய்தார் என்றால் ஆச்சரியம் தானே.

alberto-giacometti

ரூ.1250 கோடிக்கு விற்பனையான சொகுசு கப்பல்

ரஷ்யாவைச்  சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ரோமன் அப்ராமோவிச் என்பவர் வாங்கிய சொகுசு கப்பல்தான் மிகவும் காஸ்ட்லியான கப்பல். சுமார் 405 அடி நீளம் கொண்ட இந்த கப்பலை கப்பல் பொறியாளர் பிராங்க் முல்டெர் என்பவர் வடிவமைத்துள்ளார். ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் இந்த கப்பலை ரூ.1250 கோடிக்கு இவர் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

roman-abramovich

ரூ.1380 கோடிக்கு விற்பனையான ஓவியம்

இதற்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு விற்பனையான பொருளும் ஒரு ஓவியம் தான். பாப்லோ பிகாசோ என்ற ஓவியரை கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்றைக்கும் புரியாத மாதிரி ஓவியம் வரைந்தால், என்ன பிகாசோ என்று நினைப்பா என கேலி செய்வதுண்டு. ஆனால் உலகிலேயே இன்றைக்கு அதிக விலைக்கு விற்கப்பட்ட பொருளில் முன்னணியில் அவரது லெஸ் பெம்மெஸ் டி அல்கெர் என்ற ஓவியம் உள்ளது. அதே நியூயார்க்கில் 2015 இல் நடைபெற்ற ஏலத்தில் இந்த ஓவியம் 179 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1380 கோடி ரூபாய்க்கு விற்பனையானது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த சாதனையை முறியடித்துதான் லியோனார்டோ டாவின்சி 2017ல் முறியடித்து சாதனை படைத்தது.

pablo-picasso

ரூ.3480 கோடிக்கு விற்பனையான ஓவியம்

உலக புகழ் பெற்ற ஓவியர் லியோனார்டோ டாவின்சி.  இது வரை விற்பனையான பொருள்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட பொருள் இவர் வரைந்த சல்வடால் முன்டி என்ற பெயர் கொண்ட ஓவியம் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தின் போது இந்த ஓவியத்தை சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் 450 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.348 கோடிக்கு வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

leonardo-da-vinci

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து