முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க ஊழலில் முதல் இடத்தில் தமிழகம்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      ஊழல்
Image Unavailable

மதுரை, ஜன.26-அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக தொடர்ந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆதாரங்களுடன் பலமுறை புகார் கொடுக்கப்பட்டும் தொடர்ந்து கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. சுரங்க ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர்  தாலுகா கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் 398/3 சர்வே எண்ணில்  டாமின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் டாமின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் சிந்து கிரானைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கமாக கிரானைட் கற்களை கொள்ளை அடித்து வருகிறது. இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ங.முத்தையா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சிதலைவரிடம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் 2009-ம் ஆண்டு முதல் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுரங்கதுறை உயர் அதிகாரிகளுக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த  கிரானைட் சுரங்கங்களில் நடக்கும் சுரங்க கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் கடிதங்கள் அனுப்பினார். ரூ.1,500 கோடி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனியார் இடங்களில் குவித்து வைத்துள்ளதாக புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களுடன் தலைமை செயலாளருக்கு 2.6.2010 தேதி அன்றும், தொழில்துறை செயலாளருக்கு 11.6.2010 தேதி அன்றும் ரமேஷ்குமார் புகார் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருணாநிதிக்கு புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்படங்களுடன் 15.9.2010-ம் தேதி அன்று புகார் கடிதத்தை ரமேஷ்குமார் அனுப்பினார். ஆனால் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 13 கண்மாய்கள் சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமல் கிரானைட் சுரங்கங்கள் தோண்டப்பட்டதாக முதல்வர் கருணாநிதிக்கு 17.6.2010-ம் தேதியன்று முருகேசன் என்பவர் புகார் கடிதங்களுடன் அனுப்பி இருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பைவிட வேகமாக கிரானைட் கொள்ளையர்கள் கற்களை தொடர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுரங்க ஊழலில்

முதல் இடம்

சுரங்க ஊழலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்கங்களின் அளவுகளை கேட்டும் தரவில்லை. அரசிடமே சுரங்க அளவுகள் இல்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும். கர்நாடகம், ஆந்திர பிரதேசம், ஒரிசா, சதிஷ்கர் போன்ற மாநிலங்களிலும் சுரங்க ஊழல் நடக்கிறது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுரங்க ஊழல் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. பொதுவாக சுரங்க ஊழல்கள் நடைபெறும் மாநிலங்களில் சுரங்க மாபியாக்கள் தங்கள் மீது ஊழல் புகார் வந்தால் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு போடுவது எல்லா மாநிலத்திலும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவிலேயே முதன் முறையாக சுரங்க ஊழல் செய்தி வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது பொய் புகார் கொடுத்து புகார் கொடுத்த 2 1/2 மணி நேரத்தில் எந்த விசாரணையும் இன்றி கைது செய்த கொடுமை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை. தினபூமி பத்திரிகையாளர்கள் மீது 4 தினங்களில் 5 பொய் வழக்குகளை போட்ட கொடுங்கோல் ஆட்சியும் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இதில் இருந்து சுரங்க கொள்ளையின் அளவு இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாத அளவில் நடந்துள்ளதால்தான் இந்த அளவுக்கு அடக்குமுறை நடைபெற்றது.  கிரானைட் சுரங்க முறைகேடுகள் சம்பந்தமாக கருணாநிதியிடம் எந்த புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை சுரங்க ஊழலில் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதே உண்மை ஆகும்.

காந்தி சுதந்திரம்

வாங்கி கொடுத்தது

கொள்ளை அடிக்கவா?

மகாத்மா காந்தி வெள்ளைக்காரர்களிடமிருந்து கஷ்டப்பட்டு போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். இந்த சுதந்திரம் இன்று கொள்ளைக்காரர்களிடம் சென்றுவிட்டது.  ஸ்பெக்ட்ரம் ஊழல், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை என்று தமிழ்நாட்டின் சொத்துக்கள் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கொள்ளைக்காரர்கள் மீது சாதாரண மக்கள் புகார் கொடுத்தால் அந்தப்புகார் மீது எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுப்பதில்லை. கொள்ளையர்கள் அப்பாவி மக்கள் மீது பொய் புகார் கொடுத்த அடுத்த நிமிடமே பொய் வழக்கு போடப்படுகிறது. காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு அல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம். இதை போன்ற சுதந்திரத்தைதான் மகாத்மா காந்தி நமக்கு வாங்கி கொடுத்தார். ஆனால் இந்த சுதந்திரம் தற்போது நமக்கு பறிபோய்விட்டது. மகாத்மா காந்தி உயிரோடு இப்போது இருந்திருந்தால் இந்த கொள்ளையர்களை ஒழிக்க இரண்டாவது முறையாக கண்டிப்பாக போராட்டம் நடத்தி இருப்பார் என்பதை மறுக்க முடியாது!.

25கிடூடீசூஙூ

கருணாநிதி துணையுடன் சட்டவிரோதமாக

அரசு புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து கிரானைட் கற்கள் கொள்ளை

சுரங்க ஊழலில் முதல் இடத்தில் தமிழகம்

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

மதுரை, ஜன.26-

அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக தொடர்ந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆதாரங்களுடன் பலமுறை புகார் கொடுக்கப்பட்டும் தொடர்ந்து கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. சுரங்க ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர்  தாலுகா கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் 398/3 சர்வே எண்ணில்  டாமின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் டாமின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் சிந்து கிரானைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கமாக கிரானைட் கற்களை கொள்ளை அடித்து வருகிறது. இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ங.முத்தையா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சிதலைவரிடம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் 2009-ம் ஆண்டு முதல் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுரங்கதுறை உயர் அதிகாரிகளுக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த  கிரானைட் சுரங்கங்களில் நடக்கும் சுரங்க கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் கடிதங்கள் அனுப்பினார். ரூ.1,500 கோடி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனியார் இடங்களில் குவித்து வைத்துள்ளதாக புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களுடன் தலைமை செயலாளருக்கு 2.6.2010 தேதி அன்றும், தொழில்துறை செயலாளருக்கு 11.6.2010 தேதி அன்றும் ரமேஷ்குமார் புகார் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருணாநிதிக்கு புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்படங்களுடன் 15.9.2010-ம் தேதி அன்று புகார் கடிதத்தை ரமேஷ்குமார் அனுப்பினார். ஆனால் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 13 கண்மாய்கள் சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமல் கிரானைட் சுரங்கங்கள் தோண்டப்பட்டதாக முதல்வர் கருணாநிதிக்கு 17.6.2010-ம் தேதியன்று முருகேசன் என்பவர் புகார் கடிதங்களுடன் அனுப்பி இருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பைவிட வேகமாக கிரானைட் கொள்ளையர்கள் கற்களை தொடர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுரங்க ஊழலில்

முதல் இடம்

சுரங்க ஊழலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்கங்களின் அளவுகளை கேட்டும் தரவில்லை. அரசிடமே சுரங்க அளவுகள் இல்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும். கர்நாடகம், ஆந்திர பிரதேசம், ஒரிசா, சதிஷ்கர் போன்ற மாநிலங்களிலும் சுரங்க ஊழல் நடக்கிறது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுரங்க ஊழல் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. பொதுவாக சுரங்க ஊழல்கள் நடைபெறும் மாநிலங்களில் சுரங்க மாபியாக்கள் தங்கள் மீது ஊழல் புகார் வந்தால் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு போடுவது எல்லா மாநிலத்திலும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவிலேயே முதன் முறையாக சுரங்க ஊழல் செய்தி வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது பொய் புகார் கொடுத்து புகார் கொடுத்த 2 1/2 மணி நேரத்தில் எந்த விசாரணையும் இன்றி கைது செய்த கொடுமை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை. தினபூமி பத்திரிகையாளர்கள் மீது 4 தினங்களில் 5 பொய் வழக்குகளை போட்ட கொடுங்கோல் ஆட்சியும் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இதில் இருந்து சுரங்க கொள்ளையின் அளவு இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாத அளவில் நடந்துள்ளதால்தான் இந்த அளவுக்கு அடக்குமுறை நடைபெற்றது.  கிரானைட் சுரங்க முறைகேடுகள் சம்பந்தமாக கருணாநிதியிடம் எந்த புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை சுரங்க ஊழலில் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதே உண்மை ஆகும்.

காந்தி சுதந்திரம்

வாங்கி கொடுத்தது

கொள்ளை அடிக்கவா?

மகாத்மா காந்தி வெள்ளைக்காரர்களிடமிருந்து கஷ்டப்பட்டு போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். இந்த சுதந்திரம் இன்று கொள்ளைக்காரர்களிடம் சென்றுவிட்டது.  ஸ்பெக்ட்ரம் ஊழல், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை என்று தமிழ்நாட்டின் சொத்துக்கள் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கொள்ளைக்காரர்கள் மீது சாதாரண மக்கள் புகார் கொடுத்தால் அந்தப்புகார் மீது எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுப்பதில்லை. கொள்ளையர்கள் அப்பாவி மக்கள் மீது பொய் புகார் கொடுத்த அடுத்த நிமிடமே பொய் வழக்கு போடப்படுகிறது. காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு அல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம். இதை போன்ற சுதந்திரத்தைதான் மகாத்மா காந்தி நமக்கு வாங்கி கொடுத்தார். ஆனால் இந்த சுதந்திரம் தற்போது நமக்கு பறிபோய்விட்டது. மகாத்மா காந்தி உயிரோடு இப்போது இருந்திருந்தால் இந்த கொள்ளையர்களை ஒழிக்க இரண்டாவது முறையாக கண்டிப்பாக போராட்டம் நடத்தி இருப்பார் என்பதை மறுக்க முடியாது!.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago