Weekly Rasi

காலம்: 
Friday, 20 January, 2012
மேஷம்: 
  • பாரின் தொடர்பு அமைப்புகளை நன்கு அமைத்துக்கப் போகிறீர்கள். கொடுக்கல் வாங்கல் சிக்கல், ஸ்திர சொத்துக்களால் அனுகூலம் அடைவீர்கள். சுதந்திரமாக நீங்கள் செயல்பட முடியாது. யாருக்கும் உறுதி என்ற வாக்குமூலம் கொடுக்காதீர்கள். ஆக மொத்தம் எதிலுமே விழிப்புடன் இருக்கவேண்டும். சில மறைமுக விஷயங்கள்கூட மன திருப்தியைத் தரும். நீங்கள் யாருக்கும் வாக்குறுதி கொடுத்துவிடாதீர்கள். ஒரு சில காரியங்களை துணிந்து செய்வீர்கள். எண்ணிய  சில காரியங்கள் முடியும். ஏமாற்றம் அகலும். உங்கள் சேமிப்புகளில் இருந்து சிலவற்றை எடுக்க வேண்டி வரும். எவரையும் பேச்சால், செயலால் தனது பக்கம் திருப்பி விடுவீர்கள். ஸ்ரீகருடாழ்வாரை வணங்கவும்.
     
  •  
ரிஷபம்: 
  • படிப்பு விஷயம் பழுது போகாது. இல்லற வாழ்விலும் குறைகள் இல்லை. பிதுர் பூர்வீக அரசு சம்பந்தப்பட்ட வகையில் ஏதேனும் ஆதாயம் அடைவீர்கள். நாலாவிதத்திலும் பயணம், படிப்பு, தகவல் பயன் தரும். பழைய கடன்கள் சில பைசல் ஆகும். வம்பு தும்புக்குன்னு போக வேண்டாம். கோப, தாபம், குடும்பத்தில் மனஸ்தாபம் இப்படியும் சில குறைபாடுகள் உண்டு. சிலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் கூட ஆளாகலாம். நல்ல பல காரியங்களையும் மேற்கொள்வீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்சனையும் வரும். புதிய தொடர்புகள் ஏற்படுவது கடினம். பணபாக்கியம் நன்கு அமையும். ஸ்ரீவிஷ்ணு துர்க்கையை வணங்கவும்.
     
மிதுனம்: 
  • ஏதேனும் ஒரு பொதுவாழ்வில் பேசப்படுவீர்கள். வயதானவர்களின் பொறுப்பை சிலர் ஏற்க நேரும். பெற்றோர்களாலும் அனுகூலமே. கெளரவ பதவி அடைவீர்கள். பலரின் பக்கபலம் உங்களுக்கு உரிய நேரத்தில் வந்து கைகூடும். விழிப்புடன் இல்லை என்றால் ஏதேனும் ஒன்றை இழக்க நேரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அற்பசுகமாக எதையும் அனுபவித்து வருவீர்கள். எதையும் பக்குவமாக செய்துக்கும் நிலையும் உருவாகும். பூர்வீக வழியில் சில சிக்கல்கள் தோன்றும். விட்ட சில காரியங்களை தொடர்வது உண்டு. பிரிவுகளில் இருப்பவர்கள்கூட இணையக்கூடும். ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கவும்.
     
கடகம்: 
  • ஒரு சில மாற்றுவழிகளை செய்து கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டி வரும். எந்த ஒரு பிரச்சனைகளையும் அறிவாற்றல் அணுகுமுறையால் தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பயனுடையதாக செய்வீர்கள். பாரின் பயணம், அரும்கலைகளில் ஆர்வம் அமையும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்க ஆராய்ந்து அதன்பிறகு ஒரு முடிவுகளை மேற்கொள்வது நல்லது. சரியான மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். அசதி, சோர்வு வந்து விலகும். செய்தொழில்களில் சிரமம் இருக்கும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். சொன்ன வாக்கை நிறைவேற்றுவது கடினம். ஒரு சில மாற்றங்கள் அதனால் ஏற்றங்கள்தான். தன் தொழில் போக பகுதி நேரமாகவும், சில அமைப்புகளை செய்துக்குவீர்கள். ஸ்ரீசுப்பிரமணியரை வணங்கவும்.
     
  •  
சிம்மம்: 
  • சில விவகாரம், வியாஜ்ஜியம் எல்லாம் வெற்றியைத் தரும். குழந்தைகள் விஷயத்தில் குறைகள் தென்படும். கெட்ட நண்பர்களை ஒதுக்கப் பாருங்கள்.இருவகை வருமானம் எல்லாம் எதிர்பார்த்தபடி இலை. உங்களின் குடும்பத்தில் சந்தோஷம் குடிபுகும். பங்காளிகளாலும் பயன் உண்டு. குடும்பரீதியில் எதுவும் செய்ய முடியாத சில குழப்பத்தில் இருக்கிறீர்கள். புத்திரன், பூர்வீகம் சம்பந்தப்பட்ட வகைகளில் சில நிவாரணம் காணமுடியும்.பெற்றோர்களாலும் நன்மை உண்டு.மறுபுறம் உடல் அசெளகரியம், எதையும் முறையாகச் செய்யாமல் முரண்பாடுகளுடன் அவதிப்படுவது, குடும்பத்தில் வேண்டாத விருந்தினர்கள் யாராவது வந்து பிரச்சனைகளை கிளப்புவார்கள். விட்டுப் போன உறவுகள் தொடரும். ஸ்ரீபைரவர், பைரவியை வணங்கவும்
கன்னி: 
  • புத்திரர்களுக்கு அவர்கள் விருப்பப்படி சிலவற்றை செய்து கொடுப்பீர்கள். அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டி வரும். அரசு மார்க்கத்தால் அனுகூலம் அமையும். உடல்ரீதியில் இருந்த சில தொந்தரவுகள் நீங்கும். பிற இனத்தவரால் பிரயோஜனப்படுவீர்கள். எழுத்தால், பேச்சால், செயலால் சில காரிய அனுகூலம் கிடைக்கும். நல்ல சேதிவரும். வியாபாரம், கூட்டு முயற்சி, வெளிதேச தொடர்பு இதுபோன்ற அம்சங்கள் பயன் தரும். காதல் விஷயங்கள் கைகூடாது. உத்தியோகம் தொழில்ரீதியில் உங்களுக்கு உயர்வுதான். உங்கள் செயல்களைக் கண்டு அதிகாரிகளோ, முதலாளிகளோ பாராட்டுவார்கள். அதிமுக்கிய காரியங்களை உடனுக்குடன் செய்துக்குவீர்கள். சில பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடும். சில பாதகமும் பின் சாதகமும் கலந்தே இருக்கும். எவ்வித முயற்சிக்கும் அதிக பிரயத்தனம் எடுக்க வேண்டி வரும். ஸ்ரீசிம்மத்தில் உள்ள சக்தியை வணங்கவும்.
     
துலாம்: 
  • தான் உயர்வதற்கு என்று சில வழிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய நட்புகள் தொடரும். உடல்ரீதியிலும் ஒரு சில தொந்தரவுகள் உங்களை ஆட்கொள்ளும். உங்க முதலீடு எந்தவகையிலும் அபிவிருத்தியாகும். விருந்து, மருந்து செலவுகள் உண்டு. கூட்டு முயற்சியால் ஆதாயமே. உங்களின் எந்த விஷயத்தையும் ஒன்றுக்கு பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும்.சரியான உபாயங்களை கையாண்டால் கல்வியில ஓரளவு தேர்த்தி அடையலாம். நல்ல வரவினங்கள். இரவு பகல் பாராது எதிலும் அலைந்து ஒரு அனுகூலத்தை அடைவீர்கள். மங்கல காரியங்கள் தள்ளிப் போகும். பொது வாழ்வில் சில கெளரவப்பதவி கூட கிடைக்கும். ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியை வணங்கவும்.
     
விருச்சிகம்: 
  • பெண்கள் மூலமாக ஆண்களுக்கு சில திருப்புமுனைகள் இருக்கிறது. புதிய முயற்சிகள் சிலவற்றில் போக நினைப்பீர்கள். கடித போக்குவரத்தால் மனக்கஷ்டம் உருவாகலாம். பராமரிப்புச் செலவுகள் இருக்கும். சில சூழ்நிலைக்காக கடன்பட வேண்டி வரும் அல்லது பெரியதொரு சேமிப்பு சீட்டு நிறுவனம் இப்படிப்பட்ட அமைப்பிலிருந்து பணம் எடுக்க வேண்டி வரும். வீடு, வண்டி, வாகன பராமரிப்பு ஏற்படும். அதிக வேலை, இரவு பகல் பாராது உழைத்து இன்பம் அடையவேண்டும். விட்ட காரியங்களை விடாமுயற்சியால் தொடர்வீர்கள். எதிரிகளினால் சில பலவீனம் ஏற்படும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகம தொழில்ரீதியில் சில அதிகாரிகளினால் பிரச்சனைக்கு உள்ளாவீர்கள். உறவினர்கள் வகையிலும் சமூகம் இருக்கும். ஸ்ரீபைரவரை வணங்கவும்.
     
தனுசு: 
  • கடன்பட வேண்டி சில கட்டாயங்கள் வரும். உங்கள் பந்துக்களை யார், யார் எக்காரியத்திற்கு உகந்தவர்கள் என்று அவற்றை உறுதியுடன் எதையும் செய்துக்குவீர்கள். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். நெருக்கமானவர்களே உங்களுக்கு பிரச்சனையாக இருப்பார்கள். பணவிரையம் உண்டு. பிள்ளைகளாலும் சில செலவுகள் வரும். உடல்ரீதியில் பிணி, பீடைகள் ஏற்படும். நீங்கள் ஈடுபடக்கூடிய எத்துறையாக இருந்தாலும் அதில் கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும். முக்கிய கடன்களை கட்டுவீர்கள். ஷேத்திராடனம் உண்டு. குழந்தைகள் காரியம் குறைவின்றி அமையும். கெட்ட கனவுகள் எதையும் சரியானபடி அனுபவிக்கமுடியாத நிலையும் இருந்து வரும். ஸ்ரீஆறுமுகனை வணங்கவும்.
     
மகரம்: 
  • வயதானவர்களினால் தொல்லையும் உண்டு. மகான்களின் தரிசனம்கூட கிடைக்கும். சொத்து சிக்கல் பண பிரச்சினைகள், பணியாட்களால் தொந்தரவுகள் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நல்ல பணியாட்களை அடைவீர்கள். உத்தியோகம் தொழில்ரீதியில் ஒரு உயர்வை பெறமுடியாத நிலை உண்டு. தொழில்நிமித்தமான அயலூர் பயணங்கள் இருக்கும். ஒரு சில எதிர்பார்த்த காரியம் ஈடேறும். தன்னம்பிக்கை துளிர்விடும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தாம்பத்திய சுகத்தில் தடை வரும். குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்கள். ஸ்ரீமீனாட்சியை வணங்கவும்.
     
கும்பம்: 
  • பல விஷயங்களை அறிவீர்கள். தன்னுடன் இருக்கும் அனைவரையும் சரி பண்ணிப் போகவும். அன்னிய தேசம் செல்லும் வாய்ப்பு உண்டு. காசு பண சேர்க்கைகளும், இனபந்துக்களிடம் இருந்து சில கட்டுக்கள் விலகும். சுப காரியங்கள் தடபுடலாக நடக்கும். சில சொத்துக்களை ஒத்தியின்பேரில்கூட வாங்குவீர்கள். தனக்கு மூத்தவர்களின் தயவு கிட்டும். பொருள்கள் பறிபோகவும் வாய்ப்புண்டு. இடமாற்றம் அமையும். உடலை நன்கு பராமரித்துக் கொள்வீர்கள். உங்களின் முக்கிய நண்பர்களால் ஒரு சில அமைப்புகளை செய்து வைப்பீர்கள். பெண்களுக்கு தன் பெற்றோர் உறவால் சகாயமே. ஸ்ரீசரபேஸ்வரரை வணங்கவும்.
     
மீனம்: 
  • கணவன் மனைவி உறவுகளிலும் பிக்கல், பிடுங்கல்தான். பலதரப்பட்ட நபர்களை சந்திக்க நேரும். எந்தவித பொறுப்பையும் மிகக் கவனமுடன் அணுகவேண்டும். வீண் சந்தேகம், எதிர்பாராத விபத்துகள், கெட்டவர்களின் நட்பு, மூட்டு வந்து நீங்கும். நல்ல பல விஷயங்களை எடுத்துச் செய்வீர்கள். எந்தவித பெரிய பொறுப்புகளையும் ஏற்க வேண்டாம். அதை பிரயோகம் செய்து ஆதாயம் அடைய முடியவில்லை. அன்னிய நாடு, மொழி, இனத்தால் ஆதாயமே. ஊழியர்கள் மறைமுகமாக உங்களை எதிர்ப்பார்கள். தெய்வ பிரார்த்தனைகள் முடித்துக் கொள்வீர்கள். எதிலும் அதிகமான உழைப்பு இருக்கும். நாலு பேருடைய பக்கபலத்தை வைத்து எதையும் செய்ய நினைப்பது ஈடேறாது. ஸ்ரீஅஷ்டலெட்சுமியை வணங்கவும்.