ஜப்பான் நாட்டில் நேற்று மீண்டும் பூகம்பம்

டோக்கியோ,ஜன.29 - ஜப்பான் நாட்டில் நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. ஜப்பானின் மத்தியில் உள்ள யமனஷி நகர் பகுதியில் நேற்றுக்காலையில் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சேத விபரம் குறித்து எதுவும் தெரியவில்லை என்று டோக்கியோவில் உள்ள பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பூகம்பம் நேற்றுக்காலையில் சரியாக 7.43 மணிக்கு ஏற்பட்டது. பூகம்பமானது பூமிக்கடியில் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டியிருந்தது. ஜப்பான் நாட்டில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும். இதனால் அங்கு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் பூகம்பத்தால் பாதிக்கப்படாதபடி கட்டப்பட்டிருக்கும். இருந்தபோதிலும் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி ஜப்பானில் பயங்கர பூகம்பம் வெடித்தது. பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 9 ஆக பதிவாகி இருந்தது. அதனையொட்டி சுனாமி சுமார் 230 கிலோ மீட்டர் வேகத்தில் சுனாமி வீசியதில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. அணு உலையும் பாதிப்புக்குள்ளானது.