பறவை இனங்களைக் காக்க வளர்ச்சிப் பணிகள்: முதல்வர்

 

சென்னை, ஜன.29 - தென்துருவப் பகுதியில் உள்ள அபூர்வ பறவையினங்கள் வரும் நன்நீர் கழிமுகமாக இருக்கும் சுசீந்திரம், தேரூர், மணக்குடியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.61 கோடியில் நிதிஒதுக்கீடு செய்து முதல்வர் உத்திரவிட்டுள்ளார். மேலும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு வழங்கப்படும். மாத ஊதியத்தையும் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு மற்றும் கடலோர அரிமானம் போன்றவற்றை தடுத்தும், கடல் அலை சீற்றம் மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் தாக்கத்தை குறைத்தும், மழைநீnullரை தேக்கிவைத்தும், நிலத்தடி nullநீர் ஆதாரங்களைப் புதுப்பித்தும், nullநீர்வாழ் பறவைகளுக்கு வாழ்வாதாரத்தை அளித்தும், பாலூட்டிகளுக்கு உணவு, உறைவிடங்கள் அளித்தும், பலவிதமான மாசுகளை அகற்றியும், லட்சக்கணக்கான மக்களுக்கு பலவிதமான சேவைகள் மற்றும் வாழ்வாதாரங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈர நிலங்கள் வழங்குகின்றன. இந்தியாவில் தெரிவு செய்யப்பட்டுள்ள 94 ஈர நிலப்பகுதிகளில் மூன்று  தமிழ்நாட்டில் உள்ளன. அவை கோடியக்கரை, கழுவேலி மற்றும் பள்ளிக்கரணை ஈர நிலப்பகுதிகளாகும்.  ஈரப்பகுதிகளின் மேலாண்மையியலில் வாழ்விட மேம்பாடு, வன உயிரின பாதுகாப்பு, ஈரப்பகுதிகளின் அருகில் சுற்றுச்சூழல் மேம்பாடு, உயிரியல் மேம்பாடு,  விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பணிகள், இயற்கை கல்வி ஆகியவை முக்கியமான நடவடிக்கைகளாகும். தமிழகத்தில் உள்ள ஈரநிலங்களை நன்முறையில் பராமரிக்கவும், மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர் மற்றும் மணக்குடிகாயல் பகுதியில் நன்நீnullர் கழிமுகத்தில் தனித்துவம் வாய்ந்த ஈரநிலம் மிகப்பெரிய உயிர்ப்பன்மை மண்டலமாக அமைந்துள்ளது. இங்கு  காணப்படும் 90 வகை பறவை இனங்களில், 50 இனங்கள் ஆர்க்டிக் பகுதியிலிருந்து வந்து செல்பவை ஆகும். 25,000க்கும்  மேற்பட்ட ஈரநிலப் பறவைகள் இப்பகுதிக்கு வருகைத் தருகின்றன.  இதன் மூலம் இப்பகுதியை ஒரு சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.  எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர் மற்றும் மணக்குடிகாயல் பகுதியில் உள்ள நன்நீnullர் கழிமுகத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஈரநிலத்தினை பறவையினங்களை பாதுகாக்கும் மண்டலமாக அறிவிக்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், இந்த இடத்தில்  1 கோடியே 61 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் அபிவிருத்தி மற்றும் மேலாண்மைப் பணிகள் மேற்கொள்வதற்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்கள்.

 

தமிழ்நாடு வனத்துறையில் தற்பொழுது 1,240 வேட்டை தடுப்புக் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்கள் வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் யாரும் போக முடியாத இடங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் காப்புக் காடுகளை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 2,126 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இவர்களின் பணித்தன்மை மற்றும் வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது போன்ற பணிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், ஒரே மாதிரியான ஊதியம் வழங்க முடிவெடுக்கப்பட்டு, அனைத்து வேட்டை தடுப்புக் காவலர்களுக்கும் மாத ஊதியத்தினை 4,000 ரூபாயாக நிர்ணயித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக 2 கோடியே 78 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். 

இவ்வாறு முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.