அ.தி.மு.க கழக வளர்ச்சிக்கு முதல்வரிடம் நிதி அளித்தனர்

 

சென்னை,ஜன-29 - அ.தி.மு.க வளர்ச்சி நிதிக்காக அ.தி.மு.க.வின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நிதி அளித்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க தலைமைக் கழகம் அளித்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் கே.பி.அன்பழகன், எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து, தருமபுரி மாவட்டக் கழகத்தின் சார்பில்,  வளர்ச்சி நிதியாக 25 லட்சம் ரூபாயையும்,

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர்  மொளச்சூர் இரா. பெருமாள், எம்.எல்.ஏ.,  நேரில் சந்தித்து, ஒன்றிய புரட்சித் தலைவி பேரவையின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 25 லட்சம் ரூபாயையும்,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியக் கழகச் செயலாளர் பரணி இ.ஏ. கார்த்திகேயன் நேரில் சந்தித்து, ஒன்றியக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 16 லட்சம் ரூபாயையும்,

அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் துரை. மணிவேல், எம்.எல்.ஏ.,  நேரில் சந்தித்து, அரியலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 15 லட்சத்து 100 ரூபாயையும் வழங்கினார்கள்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை,  புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ.,  நேரில் சந்தித்து, விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 10 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயையும்,

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான முக்கூர் என். சுப்பிரமணியன்  நேரில் சந்தித்து, செய்யார் சட்டமன்றத் தொகுதியின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 10 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயையும்,

திருவாரூர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்  எஸ். காமராஜ் நேரில் சந்தித்து, கழக வளர்ச்சி நிதியாக 10 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும்,

திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சருமான சிவபதி நேரில் சந்தித்து, முசிறி சட்டமன்றத் தொகுதியின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 10 லட்சம் ரூபாயையும்,

திருவாரூர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் குடவாசல் எம். ராஜேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து, மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 10 லட்சம் ரூபாயையும்,

திண்டுக்கல் மாவட்டம், பழநி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபாலு அவர்கள் நேரில் சந்தித்து, சட்டமன்றத் தொகுதியின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 7 லட்சம் ரூபாயையும்,

திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சுதா கே. பரமசிவன் அவர்கள் நேரில் சந்தித்து, மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக 5 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயையும் வழங்கினார்கள்.

ஆக மொத்தம் கழக வளர்ச்சி நிதியாக 1 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான கே.வி. இராமலிங்கம் நேரில் சந்தித்து, ஈரோடு மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட 2000 பேர்களுக்கு கழக நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை கிடைக்கும் வகையில், ஆண்டு சந்தா தொகையான 22,00,000/​ ரூபாயை வழங்கினார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.