திருவனந்தபுரம்,ஜன.29 - கேரளமாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர் சிராவனா(17).இவர் ஆலப்புழை நகர வீதிகளில் பிச்சை எடுத்து வருகிறார். ஆனால் இவர் வாழ்க்கையில் ஒரு ஆசிரியையாக வர வேண்டும் என்று விரும்புகிறார். சிராவனாவின் குடும்பம் வறுமையில் வாடுவதால் இவர் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளார். சிரவனாவின் தந்தை கட்டிட தொழிலாளியாக இவரது தந்தை விபத்தில் வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளானார். இருந்த போது ம் சிரவனா பிளஸ் டு தேர்வில் அதிக மதிப்பென்கள் எடுத்து வெற்றி பெற்றார். இதற்கிடையே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தார். இததனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு சிரவனா தள்ளப்பட்டார். நாள்தோறும் கிடைக்கும் பணத்தில் பெற்றோருக்கு உணவும் மருந்தும் வாங்கிக்கொடுப்பார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் சிரவனாவை ஒரு காப்பகத்தில் சேர்த்தார். காப்பகத்தின் காப்பாளர் மர்சிலினிடம் தனது ஆசையான ஆசிரியைக் கனவை வெளிப்படுத்தியுள்ளார். இதனை கேட்ட மரிசிலின் அவரது ஆசையை நிறைவேற்ற தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்.