எம்.எல்.ஏ.களுக்கு லேப்-டாப்: ஆந்திர அரசு திட்டம்

நகரி,ஜன.29 - ஆந்திர சட்டசபையில் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக சட்டசபை கூட்டம் நடக்கும் அரங்கை புதுப்பித்து வருகிறார்கள். மேலும் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் பென்சில் அளவிலான மைக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இனி மைக்கை பிடுங்கி யாரும் எறியமுடியாது. மேலும் சட்டசபை குறிப்புகளை படித்து பார்க்க வசதியாக அனைத்து உறுப்பினர்களுக்கும் லேப்-டாப்கள் வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசு 292 லேப்-டாப்புகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றை எம்.எல்.ஏக்கள் இருக்கைகள் முன்புறம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்து. இதே போல் எம்.எல்.ஏ க்கள் இருக்கையும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.