புது டெல்லி,ஜன.29 - டீசல் வாகனங்களின் விலை விரைவில் அதிகரிக்கவுள்ளது. டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக ரூ. 80 ஆயிரம் வரி விதிக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரை அனுப்பி உள்ளது. இது தொடர்பாக பிரணாப் முகர்ஜியை பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இறக்குமதி செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயுவை கப்பல்களில் இருந்து இறக்க விதிக்கப்படும் 5 சதவீத வரியை விலகக் கோருவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஏற்கனவே கனரக வாகன தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெய்பால் ரெட்டியின் யோசனையை நிதியமைச்சகம் ஏற்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமானால் டீசல் வாகனங்களின் விலை மிக கடுமையாக உயர்ந்து விடும்.