அண்ணா - எம்.ஜி.ஆர். நினைவிடங்களை புனரமைக்க ரூ.8 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு

 

சென்னை, ஜன.- 30 - அண்ணா - எம்.ஜி.ஆர். நினைவிடங்களை புனரமைக்க ரூ.8 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளர். வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் என்றார் மகாகவி பாரதியார். அதுபோல் தமிழக மக்கள் உள்ளங்களில் இன்றளவும் வாழுகின்ற மாபெரும் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா பாரத ரத்னா எம்.ஜி.ஆர். ஆவர். பேரறிஞர் அண்ணா தனது இதயக்கனி என்று சொன்னது முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்ரைதான். எனவே, இவ்விரண்டு தலைவர்கின் நினைவிடங்களும் அருகருகே அமைந்திருப்பது இயற்கையேயாகும். இவர்களது நினைவிடத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். மறைந்த தலைவர்களின் நினைவை போற்றும் வகையில் அவர்களின் நினைவிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதாலும், நல்லதொரு சுற்றுசூழல் இருக்கவேண்டும் என்பதாலும், கடந்த ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில், 2001-12 ஆம் ஆண்டு செய்தி விளம்பரத்துறை மானியக் கோரிக்கைக்களுக்கான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் பேரறிஞர் அண்ணா மற்றும் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர். நினைவகங்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி பேரறிஞர் அண்ணா நிணைவிடத்தை புதுப்பொலிவுடன் புனரமைத்து எழிலூட்ட 4 கோடியே 30 லட்சம் ரூபாயும், அவரது நினைவிடத்தின் முகப்புத் தோற்றத்தை மாற்றிமைத்து, முன்புறத்தில் சுற்றுசுவர் கட்டுவதற்காக 3 கோடியே 40 லட்சம் ரூபாயும் என மொத்தம் 8 கோடியே 90 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த நினைவிடங்கள் புதுப்பொலிவுடன் விளங்கும்.