மும்பை, ஜன. - 30 - உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, இன்று அரியானாவில் உள்ள குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லிக்கு அழைத்து வரப்படும் ஹசாரே, அரியானாவின் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார். 2 நாள் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பெங்களூர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதம் மும்பையில் உண்ணாவிரதம் இருந்த ஹசாரே, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 8 ம் தேதியன்று ஹசாரே வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.