இன்றைய ராசிபலன்

நாள்: 
Sunday, 5 February, 2012
மேஷம்: 
  • உங்களிடம் காணப்படும் வேகத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். உங்களுடைய பொருளாதார நிலை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும். மற்றவர்களை நம்பி யாருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம்.
ரிஷபம்: 
  • கையில் பணம் இருக்கும்பொழுது செலவு வராது. செலவு வரும்போது கையில் பணம் இருக்காது. எனினும் சில நெருக்கடிகள் ஏற்படும்போது எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உண்டாகும்.
மிதுனம்: 
  • ஒரு முக்கிய நண்பர் அல்லது உறவினருக்கு சிபாரிசு செய்து பணம் கடன் கொடுத்துவிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். பெரும்பாலும் அந்த பணத்தை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். நொந்து போய்விடுவீர்கள்.
கடகம்: 
  • வெளியூர்ப் பயணங்களை முடிந்த வரை தள்ளிப் போடுவது நல்லது. சிலர் குடும்பத்துடன் நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லத் திருமணங்களில் உற்சாகமாக கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். மனைவியின் உடல்நலம் திருப்திகரமாக இருக்காது.
சிம்மம்: 
  • தொழில் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உண்டாகும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு தங்கள் கடமைகளை சீராக செய்து முடித்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிட்டும்.
கன்னி: 
  • குடும்பத்தில் மனைவியின் உடல்நலம் திருப்திகரமாக இருக்காது. அதனால் வீட்டில் எதுவும் சரியாக நடக்காது. ஆகையால் நீங்கள்தான் பொறுமையாகச் செயல்பட்டு நிலைமையைச் சீராக்க வேண்டும். ஆகையால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டியது அவசியம்.
துலாம்: 
  • ஒரு நாள் சுறுசுறுப்பாக செயல்பட்டால் மறுநாள் சோர்ந்து போய் படுத்து விடுவீர்கள். ஒரு காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்தால் மறுகாரியத்தை சொதப்பி விடுவீர்கள். புதிதாக ஒரு நண்பர் கிடைத்தால் பழைய நண்பர்களில் இருவர் எதிரிகளாக மாறுவார்கள்.
விருச்சிகம்: 
  • சோதனையாக உங்களுக்கு நிறைய வேலைகள் வந்து சேரும். எதைச் செய்வது, எதைச் செய்யாமல் விடுவது என்று புரியாமல் தடுமாறுவீர்கள். அந்த தடுமாற்றமும் குழப்பமும் உங்கள் பேச்சிலும், செயலிலும் காணப்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
தனுசு: 
  • இன்று உங்களுக்குப் பெரிய ஆறுதலாக விளங்குவது அதிகமாக அறிமுகம்  இல்லாத மனிதர்களிடம் இருந்து கிட்டும் உதவிகள்தான். உங்களுக்கு எவ்வளவுதான் நெருக்கடிகள் வந்தாலும் அவற்றை உங்களின் விவேகமான செயல்பாடுகளால் சமாளித்து விடுவீர்கள்.
மகரம்: 
  • இன்று உங்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிட்டாது. அதனால் பாதகமில்லை. ஆனால் உங்களின் உழைப்பை மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டு விடக்கூடாது என்பதில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
கும்பம்: 
  • தொழில், வியாபாரத்தில் லாபம் குறைவாக கிட்டினால் விட்டுவிடுங்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் சாதுரியமாக நடந்து கொள்வது நல்லது. வருமானம் குறைவாக இருந்தாலும் சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.
மீனம்: 
  • குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். பிள்ளைகளின் படிப்பு திருப்திகரமாக இருக்கும். தாய்வழியில் சில அவசரச் செலவுகள் ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டே போகும்.