இன்றைய ராசிபலன்

நாள்: 
Friday, 10 February, 2012
மேஷம்: 
  • மனைவி, புத்திரர்கள் சற்றே ஆரோக்கியமாகத் தென்படுவார்கள். செய்கின்ற தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் உங்கள் திறமைகளால் அதை சிறப்பாக எதிர்கொண்டு ஓரளவிற்கு முன்னேற்றமும் படிப்படியாக லாபமும் அடைவீர்கள்.
ரிஷபம்: 
  • குடும்ப வாழ்வில் ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிலருக்கு புத்ரபாக்யம் அமையப்பெறும்.  கலைஞர்களுக்கு புது கம்பெனிகளில் இருந்து அழைப்புகள் வரும்.
மிதுனம்: 
  • இன்று மிகவும் ஏற்றமிகு பலனை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையும், சந்தோஷமும் உண்டாகும். உங்கள் பலம் கூடி எதிரியின் பலமும், வலிமையும் குறையும் புதிய வீடு, வண்டி-வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும்.
கடகம்: 
  • கணவன்-மனைரி ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும் சூழல் உருவாகும்.
சிம்மம்: 
  • தாயின் வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும் திருமண வயதில் உள்ள பெண்களுக்கு வரன்கள் கூடிவரும் யோகம் உண்டாகும். பிறர் மனம் புண்படாமல் வார்த்தைகள் உபயோகிப்பது மிகவும் நல்லது. முன்கோபத்தையும், பிடிவாதத்தையும் தவிர்ப்பது நல்லது.
கன்னி: 
  • பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடமாற்றங்கள் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும். பணிகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பது நலம். மேலதிகாரிகளுடன் இணக்கமான போக்கினை அனுசரிப்பது அவசியம்.
துலாம்: 
  • இதுவரை புதிய முயற்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் அகலும். கடன்களினால் இருந்துவந்த பிரச்னைகள் மறையும். சத்ருக்களினால் ஏற்பட்ட போட்டிகள், பொறாமைகள் விலகும். ஒருசிலருக்கு இழந்த பதவிகள் மீண்டும் தானாக கிடைக்கும்.
விருச்சிகம்: 
  • புதிய தொழில்கள் தொடங்கக்கூடிய சூழல்கள் உருவாகும். இழந்த செல்வாக்கும் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களை நம்பி தாங்கள் ஒப்படைத்த பொறுப்புக்களை தாங்களே மீண்டும் ஏற்று அவற்றை செவ்வனே செய்துமுடிப்பீர்கள்.
தனுசு: 
  • இளைய சகோதர்களினால் அனுகூலம் உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். கணவன்-மனைவியிடையே அனுசரணைகள் மிகமிக அவசியம். நண்பர்களை நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபட வேண்டாம்.
மகரம்: 
  • பண விஷயத்தில் கண்டிப்புடன் இருக்கமாட்டீர்கள். உங்களுடைய பெருந்தன்மையான குணத்தால் பணத்தை அனாவசியமாக செலவுசெய்பவர்களாக இருப்பீர்கள். எதையும் நினைத்தால் நினைத்த மாத்திரத்தில் செய்துமுடித்து மற்றவர்களின் பாராட்டைப்பெறுவீர்கள்.
கும்பம்: 
  • கஷ்டங்களையும், துயரங்களையும் கண்டு அஞ்சாமல் செயல்படுவீர்கள். மநதில் உற்சாகமும், தெம்பும் தானாக வந்துசேரும். இதனால் இதுவரை இருந்த பிரச்னைகளுக்கெல்லாம் தானாகவே முற்றுப்புள்ளி ஏற்படும். வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.
மீனம்: 
  • இதுவரை கடந்துவந்த, அனுபவித்த கஷ்டங்கள் யாவும் விலகி இதுவரை தாங்கள் உழைத்த உழைப்பு வீணாக வில்லை என்பதை உங்கள் விருப்பங்கள் இனிதே நிறைவேறுவதின் மூலம் உணர்வீர்கள். எல்லோரிடமும் அன்புடனும், பிரியத்துடனும் இருப்பீர்கள்.