நாள்:
Sunday, 12 February, 2012
மேஷம்:
- கடந்த கால பாதிப்புகள் இலேசாக இருந்தாலும் நீங்கள் மீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்குவீர்கள். நீங்கள் நினைப்பதுபோல பல காரியங்களைச் செய்துமுடிக்க முடியும். சோதனைகளும், மனக்கவலைகளும் நீங்கி உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.
ரிஷபம்:
- வீடு அல்லது நிலம் வாங்கும் முயற்சிக்கு உடனே வெற்றிகிட்டும். சிலர் அவர்கள் வசிக்கும் வீட்டின் ஒருபகுதியைத் திருத்தி அமைத்துக்கொள்வார்கள். நாகரீகப் பொருட்கள், வீட்டுக்குத் தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை வாங்கும் வகையில் நிறையப்பணம் செலவாகும்.
மிதுனம்:
- தொழில், வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். அதிகமாக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் உண்டாகும். உத்தியோகம் பார்ப்பவர்களின் உழைப்பிற்கு ஏற்ற பயனோ அல்லது பாராட்டோ கிட்டாது. எதிர்பாராத சிக்கல்களால் செலவுகள் ஏற்படும்.
கடகம்:
- குடும்பத்தில் சிறுசிறு பூசல்கள் தலைதூக்கும். தம்பி அல்லது தங்கைக்கு நல்ல வேலை கிட்டுவதில் தாமதங்கள் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். பெற்றோரின் அன்பும், ஆதரவும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
சிம்மம்:
- சோதனைகளும், வேதனைகளும் தொடர்ந்தாலும் நடுநடுவே பாலைவன ஊற்றாகச் சில யோகமான பலன்களும் நடைபெறும். இதுவரை மன அமைதி என்பது உங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தது. இனி அப்படி இருக்காது.
கன்னி:
- நீங்கள் பத்து காரியங்களை செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவற்றில் ஆறு காரியங்களைச் செய்ய முடியாமல் போனாலும் நான்கு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் தேடிக்கொள்வீர்கள்.
துலாம்:
- இன்று உங்களுக்கு மன அமைதி கிட்டும். மனம் அமைதியாக இருப்பதால், நீங்கள் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய பேச்சிலும், செயலிலும் வேகம் இருக்கும். உங்களுடைய சிந்தனையில் தெளிவு காணப்படும்.
விருச்சிகம்:
- இன்று உங்களிடம் வீண் பிடிவாதம் காணப்படும். அதை ஒதுக்கி வைத்துவிட்டுக் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அது உங்களுக்குப் பல நன்மைகளைத் தேடிக்கொடுப்பதுடன், உங்களுடைய பொருளாதார நிலை சீராக இருக்க உதவும்.
தனுசு:
- இன்று நீங்கள் பல விஷயங்களில் சரியான முடிவுகளை எடுத்து, அவற்றின்படி செயல்பட்டு உங்கள் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து ஆதாயம் தேடுவீர்கள். உங்களுக்கு வேண்டியவர்களை விடவேண்டாதவர்களிடமிருந்து அதிகமான ஆதரவும், உதவிகளும் கிட்டும்.
மகரம்:
- உங்களுடைய பொருளாதார நிலை சீராக இருக்கும். அதனால் உங்களுக்கு ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமங்கள் இராது. சிலர் வீடு அல்லது நிலம் வாங்கும் முயற்சியில் இறங்குவார்கள். வேறு சிலர் நின்றுபோன கட்டட வேலையை மீண்டும் தொடங்குவார்கள்.
கும்பம்:
- தொழில், உத்தியோகம் சுமாராக நடைபெறும். கொஞ்சம் நாட்களுக்கு அப்படியே நடக்கும். விட்டுவிடுங்கள், உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். கலைஞர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
மீனம்:
- செலவுகள் அதிகமாக ஏற்படும். சிலர் சிறப்பாக கெளரவிக்கப்படுவார்கள். அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்வதாலும், அலைச்சல்கள் அதிகமாக ஏற்படுவதாலும் உஷ்ண சம்பந்தமான நோய்களால் பாதிப்பு ஏற்படும்.
