நாள்:
Sunday, 12 February, 2012
மேஷம்:
- உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், கையில் பண நடமாட்டம் தாராளமாகக் காணப்படும். அதனால் எல்லா வகையான செலவுகளையும் எளிதாகச் சமாளித்துக்கொள்வீர்கள்.
ரிஷபம்:
- ஓரளவு மருத்துவச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களும், ஆதரவும் கிடைக்கும். கலைஞர்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
- உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருமானத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். கணவன்-மனைவி உறவில் நெருக்கமும், மகிழ்ச்சியும் காணப்படும். பிள்ளைகளுக்குப்புத்தாடைகள், ஆடம்பரப் பொருட்கள் போன்றவற்றை வாங்கித் தருவீர்கள்.
கடகம்:
- இதுவரை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்த நீங்கள், திடீரென்று உங்கள் வேகத்தைக் குறைத்துக்கொள்வீர்கள். உங்களிடம் சோமபேறித்தனம் அதிகமாகக் காணப்படும். எந்தக்காரியத்தை எடுத்துக்கொண்டாலும் தள்ளிப்போடும் மன நிலை உண்டாகும்.
சிம்மம்:
- வீணாகப் பொழுதைக் கழிப்பதில் சுகம் காண்பீர்கள். இதனால் அவசர வேலைகளில்கூட ஆர்வம் காட்டாமல் ஒதுக்கிவைப்பீர்கள். இதனால் சில நல்ல வாய்ப்புகள் கை நழுவிப்போகும். வெளியூர்ப்பயணங்கள் ஏமாற்றம் தரும்.
கன்னி:
- உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. கைககள் அல்லது கால்களில் பாதிப்பு, முதுகுவலி, தசைப்பிடிப்பு போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத விதமாக ஓரளவு மட்டுமே அறிமுகமான மனிதர்களிடமிருந்து சில நல்ல உதவிகள் கிட்டும்.
துலாம்:
- நின்றுபோன சுபகாரியப்பேச்சு வார்த்தை மீண்டும் சிறுசுறுப்பாகத் தொடங்கும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லச் சுப காரியங்களுக்குக் குடும்பத்துடன் சென்று கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.
விருச்சிகம்:
- உங்களுடைய பொருளாதாரநிலை திருப்திகரமாகக் காணப்பட்டாலும், எதிர்பாராத செலவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டு உங்களை தடுமாற வைக்கும். சிலர் பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதுவாகனம் வாங்குவார்கள்.
தனுசு:
- தொழில், வியாபாரம் நன்றாக நடைபெறுவது போல்தெரிந்தாலும், குறைவான லாபமே கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். கலைஞர்களில் சிலருக்கு விருது அல்லது கெளரவப்பதவி கிட்டும்.
மகரம்:
- குடும்பத்தில் சில பிரச்னைகளைத் தீர்க்க மனைவியின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் சில விஷயங்கள் ஏற்படும். இதனால் அடிதடிகள், வம்புச் சண்டைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
கும்பம்:
- பழைய பிரச்னைகள் மீண்டும் தலைதூக்கும். அவற்றைப் பொறுமையாகச் சமாளிக்க வேண்டும். அல்லது எச்சரிக்கையாக இருந்தால் அவற்றைத் தவிர்த்துவிடலாம். புது நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழக வேண்டும்.
மீனம்:
- புதிதாய் அறிமுகமாகும் நண்பர்களால் உங்களுக்குச் சில தொல்லைகள் ஏற்படலாம். ஆகையால் யாருக்கும் சிபாரிசு செய்து கடன் வாங்கிக்கொடுக்காதீர்கல். இல்லையெனில் நீங்கள் வாங்கிக்கொடுத்த கடனை நீங்களே கட்டவேண்டிய நிலை ஏற்படலாம்.
