இன்றைய ராசிபலன்

நாள்: 
Thursday, 23 February, 2012
மேஷம்: 
  • கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திப் பலருடைய பாராட்டுக்களைப் பெற்றாலும் வருமானம் சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். பெற்றோரின் தேவைகள் அதிகரிக்கும்.
ரிஷபம்: 
  • உங்களுடைய முயற்சிகளுக்கு உடனே வெற்றி கிட்டுவது போல் தோன்றினாலும் அவ்வாறு கிட்டாது, இழுத்துக்கொண்டே போகும். சில முயற்சிகளுக்கு வெற்றியே கிட்டாமலும் போகலாம். அதைப்பார்த்துச் சோர்ந்துபோய் சுருண்டுபடுத்து விடக்கூடாது.
மிதுனம்: 
  • முயற்சியை மீண்டும், மீண்டும் செய்யுங்கள். அவற்றில் வேகத்தையும், கவனத்தையும் அதிகப்படுத்துங்கள். கண்டிப்பாக வெற்றிகிட்டும் அந்த வெற்றி மகிழ்ச்சியையும் அளிக்கும். பெண்களால் வம்புகளும், வாக்குவாதங்களும் ஏற்பட்டு உங்கள் கெளரவத்தைப் பாதிக்கலாம்.
கடகம்: 
  • உங்களுடைய நண்பர்களில் சிலர் உங்களைச் சிக்கலில் மாட்டிவிடப் பார்ப்பார்கள். என்பதால், நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்காது. நோய்கள் வந்தால் உடனுக்குடன் கவனியுங்கள். காலதாமதம் செய்தால் மருத்துவச்செலவு எகிறிவிடும்.
சிம்மம்: 
  • உங்களுடைய பொருளாதார நிலை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும். சிலசமயங்களில் கையில் பலநூறு ரூபாய் நோட்டுகள் புரளும். வேறு சில சமயங்களில் ஒரு நூறு ரூபாய்க்கே தாளம் போட வேண்டியிருக்கும். செலவுகள் விஷயத்தில் சிக்கனம் தேவை.
கன்னி: 
  • மனதில் ஆன்மீக உணர்வு அடிக்கடி தலைதூக்கும். ஆலயத்திருப்பணிகளுக்கு உங்களால் இயன்ற அளவு காணிக்கைகளை செலுத்துவீர்கள். உடன் பிப்புக்களால் ஏற்படும் தொந்தரவுகளை சமாளிக்க பெற்றோர்களின் உதவியும், ஆதரவும் தேவைப்படும்.
துலாம்: 
  • தொழில்-வியாபாரத்தில் புதிதாகச் சில நெருக்கடிகள் தோன்றும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக காணப்படும். கலைஞர்கள் சில பிரச்னைகளைச் சமாளிக்கச் சிரமப்பட்டாலும் சாமர்த்தியமாக வருமானத்தைப் பெருக்கிக்கொள்வார்கள்.
விருச்சிகம்: 
  • குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து சில பிரச்னைகளைத் தீர்க்க வழி காண்பார்கள். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உண்டாகும். பிரயாணங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக ஆதாயங்களைத் தேடிக்கொடுக்கும்.
தனுசு: 
  • கடந்த காலங்களில் உங்கள் கெளரவத்தைப் பாதிக்கும் வகையில் சில நகிழ்ச்சிகள் நடைபெற்றிருக்கும். இனி அப்படிப்பட்ட பாதிப்புகளோடு அல்லது தொல்லைகளோ ஏற்படாது. உங்களுடைய செல்வாக்கும், கெளரவமும் படிப்படியாக உயரும்.
மகரம்: 
  • பெண்கள் மூலமாகச் சில நல்ல உதவிகள் கிட்டும். சுற்றுவட்டாரத்தில் நீங்கள் ஒரு முக்கியப்பிரமுகராகக் கருதப்படுவீர்கள். இதற்கு முன்னால் உங்கள் பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்திருக்காது. ஏகப்பட்ட செலவுகள், நிறைய கடன் பற்றாக்குறை என இருந்திருக்கும்.
கும்பம்: 
  • கடன்கள் தீரும். சேமிப்பிலும் பணம் சேரும். இதனால் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற உங்களின் ஆசை இப்போது நிறைவேறலாம். வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளப் பல நல்ல வாய்ப்புகள் உருவாகும். 
மீனம்: 
  • குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கமான உறவு காணப்படும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுபவிசேஷங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.