எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.- 30 - எழுச்சி, ஆற்றல், போர்க்குணம் கொண்ட நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக தேர்ந்தெடுத்துள்ளோம் என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார். மதுரை ஆதீனம் தனது அடுத்த வாரிசாக 293வது மதுரை ஆதீன சன்னிதானமாக நித்தியானந்தாவை நியமித்தார். இதற்கான விழா ஏற்கனவே பெங்களூரு நித்தியானந்தா தியான பீடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் மதுரை ஆதீனத்திற்கு தங்க கிரீடத்தை நித்தியானந்தா அணிவித்து ஆசி பெற்றார். பின்னர் நித்தியானந்தாவிற்கு மதுரை ஆதீனம் தங்ககிரீடம், துளசிமாலையும் அணிவித்து 293வது மதுரை ஆதீனமாக முடிசூட்டினார். பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது, இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சிஅம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள். சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம். இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்.
பின்னர் மதுரை ஆதீனம் 293வது சன்னிதானம் நித்தியானந்தா சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது, ஆதினம் மடம் போன்றது ஒரு கடல். நான் ஒரு துளி. கடலில் கலப்பதைத்தான் துளி விரும்பும். அதைப்போலவே நான் விரும்பியே இந்த பதவியை ஏற்கிறேன். மேலும் மதுரை ஆதீனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ளேன். மதுரை ஆதீன மடத்திற்கு குரு காணிக்கையாக ரூ. கோடி தருவதாக அறிவித்தேன். தற்போது இதை 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் மதுரை ஆதீன மடத்தில் 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படும். ஆதீனம் மடம் சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆதீனமடத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். நடிகை ரஞ்சிதா குறித்து கேட்கிறீர்கள். அந்த சம்பவம் முழுமையான பொய். என் மீது பொறாமையின் காரணமாகவும், என்னை அழிப்பதற்காவும் இப்படி செய்தார்கள். கோர்ட்டில் நான் நிரபராதி என்று நிருபிப்பேன். தமிழ்நாட்டில் 800 தியான பீடங்கள் உள்ளது. 12 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்தாலும் எனது தியான பீடங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. விரைவில் 50 சன்னியாசிகள் மதுரை ஆதீனமடத்திற்கு அனுப்பப்பட்டு நிர்வாகத்தை கவனிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் இரு ஆதீனங்களும் ஊர்வலமாக மீனாட்சி அம்மன்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
நித்தியானந்தா மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று மதியம் 1.30 மணியளவில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதீன மடத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் திருஞானசம்பந்தரை பற்றி வாழ்த்து பா பாடினர். அப்போது நித்தியானந்தாவின் பக்தர்கள் நித்தியானந்தா பாடலை பாடினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு நிலைமையை சரிசெய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.