முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் செல்கிறார் பிரதமர் மன்மோகன்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.9  - அணிசேரா நாடுகள் இயக்கத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் வரும் 29 ம் தேதி ஈரான் செல்லவுள்ளார்.  இம்மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உள்ளிட்ட தலைவர்களுடன் மன்மோகன்சிங் பேச்சு நடத்துவார். ஈரானில் ஆகஸ்ட் 29 ம் தேதி அணிசேரா நாடுகள் இயக்கத்தின் 16 வது மாநாடு நடைபெறவுள்ளது. இந்த இயக்கத்தில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த மே மாதம் மன்மோகன்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரான் அதிபர் மெகமூத் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அப்போது இரு நாட்டுக்கும் இடையே பல்வேறு தளங்களில் உறவை பலப்படுத்துவதன் மூலம் முன்னேற்றங்களை காண முடியும் என தான் நம்புவதாகவும் கூறினார். 

அவரது அழைப்பை ஏற்றுக் கொண்ட மன்மோகன்சிங் ஈரானுடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மாநாட்டையொட்டி ஈரானில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மன்மோகன்சிங் அகமது நிஜாத்தை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார். ஈரானில் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதார தடையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் அளிக்கிறது. ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதார தடையை மட்டும்தான் கடைப்பிடிப்போம் என்று இந்தியா கூறி வருகிறது. 

இந்த நிலையில் ஈரான் அதிபருடனான மன்மோகன்சிங்கின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 12 சதவீதத்தை ஈரானில் இருந்துதான் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்