முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் அமைச்சர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.31 - பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ஐவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 20,702 அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.1522 கோடி செலவில் கட்ட திட்டமிட்டு 6000 குடியிருப்புகள் முடிவுறும் நிலையில் உள்ளது. மேற்படி குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்குடியிருப்புகள் எதிர் வரும் 2013 மார்ச் மாதத்திற்குள் முடிவுற்று பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும் 14,702 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஆரம்பக்கட்ட அஸ்திவார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பகுதி மண்ணின் உப்புத் தன்மையை கருத்தில் கொண்டு இக்குடியிருப்புகளின் அஸ்திவாரத்திற்கு பயன்படுத்தப்படும் எஃகு கம்பிகள் ரசாயன கலவையால் பூசப்பட்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டப்பகுதியில்  நடைபெறும் பணிகளை வீட்டு வசதித் துறை  அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

வீட்டு வசதித் துறை அமைச்சரின் ஆய்வின் போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  கே.பி.கந்தன், மாநகராட்சி 200வது வார்டு உறுப்பினர் நாராயணன், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வெ.சந்திரசேகரன், தலைமைப் பொறியாளர் ஆர்.ஜெயபால் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்