முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வில் இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் கருத்து மோதல்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், அக். 11 - ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டது.  பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி கடந்த வாரம் ஐ.நா. சபையில் உரையாற்றுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். காஷ்மீர் என்பது ஐ.நா. அமைப்பின் தோல்வியின் அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பதிலடி கொடுத்து பேசுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ஜம்மு காஷ்மீர். ஜர்தாரியின் கருத்து நியாயப்படுத்த முடியாதது என்றார். 

இந்நிலையில் ஐ.நா. சிறப்பு அரசியல் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் நிரந்தர துணை பிரதிநிதியான ராஜாபஷீர் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு ஐ.நா.வின் காலனிமய எதிர்ப்பு திட்டம் நிறைவு தராது. இந்த பிரச்சினைக்கு காஷ்மீர் மக்கள் உட்பட அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அமைதியான தீர்வை காண பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய தூதர் பிரகாஷ் குப்தா கூறுகையில், 

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பிரச்சினை எழுப்பி உள்ளது வருந்தத்தக்கது. பாகிஸ்தான் பிரதிநிதியின் இந்த கருத்துக்களை நிராகரிக்கிறோம். இந்திய அரசியல் சாசனம் தனது குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. காஷ்மீர் மக்கள் ஜனநாயக ரீதியிலான தேர்தல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலை தொடரும் என்றார். இதற்கு பாகிஸ்தான் பிரதிநிதி பதிலளிக்கையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்