Weekly Rasi

காலம்: 
Sunday, 16 December, 2012 - Saturday, 22 December, 2012
மேஷம்: 
 • அசுவினி நட்சத்திரம் : இந்த வாரம் 16-ம் தேதி மற்றும் 18-ம் தேதி ஆகிய இருநாட்களும் சோதனையான நாட்களாக அமையலாம். இந்த இரு நாட்களில் கடுமையான வேலைகளை செய்தால் குழப்பத்தில் முடியும். இதர நாட்களில் யோகமான பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தைப்பொறுத்தவரையில் இந்த வாரம் வீடு குறித்த அக்கறையை அதிகப்படுத்தும் என்றாலும், வீட்டில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்துகொள்வது கடினம்தான் என்பதால் பிரச்சனைகளும், குழப்பங்களும் அதிகரிக்கலாம். தொழில் நிலையைப் பொறுத்தவரையில் தொழிலில் போட்டி-பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கவே செய்யும்.
 • பரணி நட்சத்திரம்: இந்த வாரம் வெளிவேலைகளைச் செய்யவிடாமல் குடும்பம், குடும்பம் என குடும்பத்தைப் பற்றிய சிந்தனைகள் உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ளும். இதுவும் நல்லதிற்குத்தான், குடும்பத்தைப்பொறுத்த வரையில் அப்பா முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொண்டு இறுக்கமாகக் காணப்படுவார். அம்மாவும், மனைவியும் ஒருவர்மீது ஒருவர் ஏதாவது ஒரு காரணம் கூறி குறைபுராணம் வாசித்துக்கொண்டு இருப்பார்கள். அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தொழில் நிலையைப் பொறுத்தவரையில் தொழிலில் சிக்கல்களும் பிரச்சனைகளும் ஏற்படவே செய்யும்.
 • கார்த்திகை 1 நட்சத்திரம்: இந்த வாரம் தொழில் ரீதியில் பல இடங்களுக்குச் சென்று வரும்போது மனைவி கேட்டது, அம்மா கேட்டது எல்லாம் நினைவுக்கு வரும். அவைகளை வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். முடிந்த அளவுக்கு வாங்கவும் செய்வீர்கள். குடும்பத்தைப்பொறுத்த வரையில் குழந்தைகள் படிப்பு சம்பந்தமாக அவர்களுக்கு நீங்கள் சின்னச்சின்ன உதவிகளைக் கூடச் செய்வது இல்லை எனகுறை கூறுவர். தொழில்நிலையைப் பொறுத்த வரையில் தொழிலில் பொறுமையின் அவதாரமாக பிரச்சனைகள், சிக்கல்களைச் சமாளித்து நிதானமாக வேலைகளைச் செய்யும் படியாக இருக்கும்.
ரிஷபம்: 
 • கார்த்திகை 2,3,4 நட்சத்திரம்: இந்த வாரம் தினமும் வரவுகளுக்கு வாய்ப்புண்டு. மேலும் பெண்களின் ஒத்துழைப்பும், அவர்களால் நிறைய ஆதாயங்களும் கிடைக்கும். அரைகுறையாக விட்டிருந்த வேலைகளை முடிக்க முயற்சி செய்யலாம். குடும்பத்தைப்பொறுத்த வரையில் வீட்டுக்கு வேண்டாத உறவினர்களின் வருகை அதிகரிக்கும். அவர்கள் நன்றாகத் தின்றுவிட்டு சாப்பாட்டைக் குறை சொல்வதுடன், வீட்டுப்பெண்களின் அமைதியைக் குலைத்து கலகமூட்டுவதில் குறியாக இருப்பர். தொழில் நிலையில் உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் சலிப்பு முகத்தினராய் வலம் வருவர். அவர்கள் எதிர்பார்க்கிறபடி எதுவுமே நடக்கவில்லை என்பர்.
 • ரோகிணிநட்சத்திரம்: இந்த வாரம் பொருளாதாரநிலை உயர வாய்ப்புண்டு. இதனால் பொன், பொருள் சேர்க்கையில் ஆர்வம் கூடும். பொதுக் காரியங்கள் சரியாக நடக்கவும், உங்களது கூட்டாளிகள் கேட்கும் சின்னச்சின்ன உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டியது இருக்கும். குடும்பத்தைப்பொறுத்த வரையில் வீட்டுப்பிரச்சனைகள் சிலவற்றை சமூகமான முறையில் தீர்க்கமுடியும். அப்பாவின் குத்தல் பேச்சுக்கள், அம்மாவின் முணுமுணுப்பு, மனைவியின் முறைப்பு எல்லாவற்றிற்கும் மெல்லிய சிரிப்பும், மழுப்பலான பேச்சுக்களுமே உங்களிடமிருந்து பதிலாகக் கிடைப்பதால் எல்லோருமே வேறுவழி தெரியாமல் அவர்களுக்கு வேண்டியதை வெளிப்படையாகக் கேட்பார்கள்.
 • மிருகசீரிடம் 1,2 நட்சத்திரம்: இந்த வாரம் பணஉதவி, ஆள்உதவி குறைபாட்டினால் அரைகுறையாக வீட்டிருந்த வேலைகளை முழுமையாகச் செய்து முடித்திட முடியும். சவால் விடுவது, வாக்குறுதிகளை அள்ளிவீசுவது போன்ற விஷயங்களில் உஷாராக இருக்கவேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரையில் சகோதரர்களிடமிருந்து போன் வரலாம். அம்மா சில நாட்கள் அவர்களது வீட்டில் தங்கி இருக்க ஏற்பாடு செய்யச் சொல்வார்கள். வந்து அழைத்துப் போகுமாறு சொல்லலாம். தொழில் நிலையைப் பொறுத்தவரையில் வியாபாரிகள் லாபம் குறையாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசிப்பார்கள்.
மிதுனம்: 
 • புனர்பூசம் நட்சத்திரம்: இந்த வாரம் பெரியவர்கள், அனுபவசாலிகளின் கட்டளைகள் உங்களைக் கோபமூட்டலாம். அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடக்கூடாது. லாபகரமாக என்ன செய்யமுடியுமோ அதை மட்டும் நிதானமாகச் செய்து கொண்டிருந்தாலே போதுமானது. குடும்பத்தைப் பொறுத்த வரையில் குடும்பப்பிரச்சனைகள் என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கக் கூடியது தான். எதையாவது தோண்டித் துருவிப்பார்த்து சரி செய்யப் போகிறேன் என இறங்கினீர்கள் எனில் குழப்பம் தான் மிஞ்சும், தொழில்நிலையைப் பொறுத்த வரையில் தொழில் அதிபர்கள் புதிய ஆர்டர்களைப்பெறுவர். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறித்து நல்ல செய்திகள் வரலாம்.
  பூசம்நட்சத்திரம்: இந்த வாரம் எதிர்ப்புகள், பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சமாளிக்கமுடியும் என்பதுடன், பதவிஉயர்வும், விரும்பும் இடமாற்றங்கள், சுபகாரியச் செய்திகள் வருவது, சொத்துக்கள் விஷயமாக இனிக்கும் செய்திகள் என பல நல்ல தகவல்களைப் பெற முடியும். குடும்பத்தைப்பொறுத்த வரையில் அப்பாவின் முகம் சரியில்லை, அம்மாவின் முகத்திலோ கடுகு வெடிக்கிறது, மனைவியின் முகம் வழக்கத்தைவிட அதிகமாக சிவந்துள்ளது, பிள்ளைகள் நச்சரிப்பது போல ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆகையால் குடும்பத்திற்கு தேவையான அவசர, அவசியமான தேவைகள் என நீங்கள் கருதுவதை மட்டும் செய்து கொண்டிருந்தாலே போதும்.
  ஆயில்யம் நட்சத்திரம்: இந்த வாரம் குடும்பத்தினருக்கு சில விஷயங்களில் உங்களது உதவி தேவைப்படும். குடும்பத்தேவைக்கு என பல பொருட்களை வாங்க வேண்டியது இருக்கும். அதனை நீங்கள்தான் செய்ய முடியும். அப்பாவிற்கும், அம்மாவிற்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டியிருக்கும். பிள்ளைகள் பள்ளி அல்லது கல்லூரிகளில் இருந்து பெற்றோர்களுக்கு அழைப்பு வரும். பள்ளிக்கு பிள்ளைகளுடன் சென்று அவர்களை மகிழ்விக்க வேண்டும். தொழில் நிலையைப் பொறுத்த வரையில் தொழில் லாபகரமாக நடக்கும் என்றாலும் கூட்டணியில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம்.
கடகம்: 
 • புனர்பூசம் நட்சத்திரம்: இந்த வாரம் பெரியவர்கள், அனுபவசாலிகளின் கட்டளைகள் உங்களைக் கோபமூட்டலாம். அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடக்கூடாது. லாபகரமாக என்ன செய்யமுடியுமோ அதை மட்டும் நிதானமாகச் செய்து கொண்டிருந்தாலே போதுமானது. குடும்பத்தைப் பொறுத்த வரையில் குடும்பப்பிரச்சனைகள் என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கக் கூடியது தான். எதையாவது தோண்டித் துருவிப்பார்த்து சரி செய்யப் போகிறேன் என இறங்கினீர்கள் எனில் குழப்பம் தான் மிஞ்சும், தொழில்நிலையைப் பொறுத்த வரையில் தொழில் அதிபர்கள் புதிய ஆர்டர்களைப்பெறுவர். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறித்து நல்ல செய்திகள் வரலாம்.
 • பூசம்நட்சத்திரம்: இந்த வாரம் எதிர்ப்புகள், பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சமாளிக்கமுடியும் என்பதுடன், பதவிஉயர்வும், விரும்பும் இடமாற்றங்கள், சுபகாரியச் செய்திகள் வருவது, சொத்துக்கள் விஷயமாக இனிக்கும் செய்திகள் என பல நல்ல தகவல்களைப் பெற முடியும். குடும்பத்தைப்பொறுத்த வரையில் அப்பாவின் முகம் சரியில்லை, அம்மாவின் முகத்திலோ கடுகு வெடிக்கிறது, மனைவியின் முகம் வழக்கத்தைவிட அதிகமாக சிவந்துள்ளது, பிள்ளைகள் நச்சரிப்பது போல ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆகையால் குடும்பத்திற்கு தேவையான அவசர, அவசியமான தேவைகள் என நீங்கள் கருதுவதை மட்டும் செய்து கொண்டிருந்தாலே போதும்.
 • ஆயில்யம் நட்சத்திரம்: இந்த வாரம் குடும்பத்தினருக்கு சில விஷயங்களில் உங்களது உதவி தேவைப்படும். குடும்பத்தேவைக்கு என பல பொருட்களை வாங்க வேண்டியது இருக்கும். அதனை நீங்கள்தான் செய்ய முடியும். அப்பாவிற்கும், அம்மாவிற்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டியிருக்கும். பிள்ளைகள் பள்ளி அல்லது கல்லூரிகளில் இருந்து பெற்றோர்களுக்கு அழைப்பு வரும். பள்ளிக்கு பிள்ளைகளுடன் சென்று அவர்களை மகிழ்விக்க வேண்டும். தொழில் நிலையைப் பொறுத்த வரையில் தொழில் லாபகரமாக நடக்கும் என்றாலும் கூட்டணியில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம்.
சிம்மம்: 
 • மகம் நட்சத்திரம்: இந்த வாரம் தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் எல்லாமே உங்களுக்கு சாதகமான பலன்களையே தரும். சொத்துக்கள் வாங்குவது விற்பது, தொழிலில் சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்வது, பிள்ளைகளின் உயர்வுக்கான விஷயங்கள் குறித்து ஏதாவது செய்தாக வேண்டும் எனப்பறப்பது எல்லாம் அவசியம்தான். என்றாலும் நெட் ரிசல்ட் எனப்பார்க்கும் போது சோர்வுதான் மிஞ்சும். குடும்பத்தைப்பொறுத்தவரையில் எதிலும் அவசரம், பதட்டம் உதவாது என்பது உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு புரியாது. தொழில் நிலையைப் பொறுத்தவரையில் உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் வரவுகள் குறித்து இன்னும் கொஞ்சம் போடு எனும் மனப்பான்மையுடன் இருப்பர்.
 • பூரம் நட்சத்திரம்: இந்தவாரம் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கும், இடமாற்றங்களுக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். என்னதான் நிதானமாகச் செயல்பட்டாலும் சறுக்கல் ஏற்படத்தான் செய்யும். இதுவும் உங்களுக்கு ஒரு விதத்தில் சாதகம்தான். தெய்வ பலத்துடன் நிதானமாகச் செயல்பட முடியும். குடும்பத்தைப் பொறுத்தவரையில் அப்பா ஊருக்குப்போய் பழைய வீட்டைப் புதுப்பிக்கவேண்டும், நிலபுலன்களைப் பார்த்து வரவேண்டும் என்பார். அம்மா அந்த சாக்கில் உறவுகளைப் பார்த்து வரலாமே என்பாள். மாணவ, மாணவிகள் பேசக்கூட நேரம் இல்லை என புத்தகமும், கையுமாக உலா வருவர்.
 • உத்திரம் 1 நட்சத்திரம்: இந்த வாரம் மனைவி நீங்கள் கொடுத்த பணம் இரண்டு நாள் செலவுக்குக் கூடக் காணாது, எப்படிச் சமாளிப்பது என முரண்டு பிடிப்பாள். ரசம், வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், ஊறுகாய் என எப்படியோ சமாளி என்று சொல்லிவிட வேண்டியதுதான். மளிகைக்கடனும் உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தான். பிள்ளைகள் நோட்டு, புத்தகம் என சின்னச் சின்ன செலவுகள் அதிகரிப்பதால் பாக்கெட்மணி கூடுதலாகக் கேட்பார்கள். நீங்களே கடைகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்து விடலாம். மாணவ, மாணவியர் படிக்கிறோம், புரிவதற்கு நேரமாகிறது என்பர்.
கன்னி: 
 • உத்திரம் 2,3,4 நட்சத்திரம்: இந்த வாரம் உடல்நலக்குறைவு, எதைப்பற்றியாவது பயம் இருந்து கொண்டு தான் இருக்கும். இதனால் தொழிலில் வேண்டாத பிரச்சனைகள் வரத்தான் செய்யும். கூட்டாளிகளுடன் அதிகபட்சம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போனாலும் கூட, லாபம் குறைய வாய்ப்புண்டு என்பதால், பெரியவர்கள் அனுபவசாலிகள் உங்களை உஷார், நிதானம், அசதி, மறதி கூடாது என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சொல்வதை வைத்து லாபகரமாக என்ன செய்யமுடியுமோ அதைமட்டும் நிதானமாகச் செய்து கொண்டிருந்தால் போதுமானது. உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் புலம்பிக்கொண்டு வேலைசெய்வர். வரவுகள் காணாது.
 • அஸ்தம் நட்சத்திரம்: இந்த வாரம் 16-ம் தேதி மற்றும் 18-ம் தேதிகளில் பண வரவுகள் ஏற்படலாம். 20-ம் தேதியும், 21-ம் தேதியும் வீட்டிலோ, அலுவலகத்திலோ ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு சின்னச் சின்ன வேலைகளை மட்டும் கவனமாகச் செய்து முடிக்கப் பார்க்க வேண்டும். புதியவர்கள் அறிமுகம், புதிய முயற்சிகளில் இறங்குவது ஆகியவற்றைத் தவிர்க்கலாம். தொழில்நிலையைப் பொறுத்த வரையில் வியாபாரிகள் அதிகாரிகளின் போக்கிரித்தனத்தை சமாளிக்கத் திணறுவர். தொழிலதிபர்களுக்கு அரசு கெடுபிடிகள் வரலாம். கலைஞர்கள் செய்தி குறித்து பயப்படுவர். பயணங்கள் தடைப்படும். மாணவ, மாணவியர் தெளிவாகவும், சலசலப்பாகவும் காணப்படுவர்.
 • சித்திரை 1,2 நட்சத்திரம்: இந்த வாரம் கூட்டாளிகள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் ஏதேனும் பிரச்சனைகளைக் கிளப்பிக்கொண்டு தான் இருப்பார்கள். இதனால், தொழிலில் மந்தமான சூழ்நிலை நிலவும் என்பதால், லாபம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரையில் அப்பா எப்போதும் கோபமான மூடில் காணப்படுவார். அம்மாவும், மனைவியும் இதென்னவீடா? சத்திரமா எனக்கூச்சலிடுவர். தொழில் நிலையைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகள் பேசுகிறார்களா, சம்பந்தா, சம்பந்தம் இல்லாது உளறுகிறார்களா எனக் கருதும்படி அவர்களது பேச்சில் குழப்பம் இருக்கும்.
துலாம்: 
 • சித்திரை 3,4 நட்சத்திரம்: இந்த வாரம் நல்ல காரியங்களைச் செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக அலைய வேண்டி இருக்கிறதே என யோசிக்கவேண்டாம். இதனால் உங்களது பல வேலைகளைச் சுலபமாகவும், சுமூகமாகவும் முடித்துக்கொள்ள முடியும். குடும்பத்தைப்பொறுத்த வரையில் உறவாட வந்திருக்கும் உறவினர்கள், பேசக்கூடாத விஷயங்களை எல்லாம் பேசி சிண்டு முடிந்துகொண்டு இருப்பார்கள். தொழில் நிலையைப்பொறுத்த வரையில் உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மாற்றங்கள் குறித்து பயம் இருக்கும். கூட்டாளிகளை சமாளிப்பதற்கு வியாபாரிகளும், தொழிலதிபர்களும் சிரமப்படுவார்கள்.
 • சுவாதி நட்சத்திரம்: இந்த வாரம் 18-ம் தேதி, 20-ம்தேதி மற்றும் 21-ம் தேதி ஆகிய மூன்று நாட்களில் புதிய முயற்சிகள், முக்கிய சந்திப்புகளைக் கூடுமான வரையில் தவிர்க்கலாம். 17-ம்தேதி மற்றும் 19-ம் தேதிகளில் வரவுகளுக்கு வாய்ப்புண்டாகும். குடும்பத்தைப்பொறுத்த வரையில் நீங்கள் எது செய்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு தப்பாகவே தெரியும். பிள்ளைகளை படிப்பு குறித்து விசாரிக்கலாம். அவர்கள் பின் தங்கியிருந்தால் அவர்களிடம் எரிந்து விழக்கூடாது. வீட்டுத்தேவைக்கு மனைவி பணம் கேட்கும் பொழுது எல்லாம் நாலு கேள்விகள் கேட்டுவிட்டுப் பணம் கொடுக்கவேண்டும். தொழில்நிலையில் அரசியல்வாதிகளுக்கு பதவிகள் குறித்து ஏமாற்றமிருக்கும்.
 • விசாகம் 1,2,3 நட்சத்திரம்: இந்த வாரம் சிலரைச் சந்தித்துப் பேசினால் உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் என உங்கள் மனதுக்குத் தோன்றினால் அலட்சியம் கூடாது. அலட்சியம் காட்டினால் வீண் கவலை, அசதி, மறதிக்கு அழைத்துச் செல்லும். உடல் நலனிலும் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம். குடும்பத்தைப் பொறுத்த வரையில் வீட்டில் உள்ளவர்கள் அவர்களாக உருப்படியாக ஏதாவது செய்து கொள்ளட்டும், செலவுகள் அதிகமானாலும் பரவாயில்லை எனவிட்டுவிட வேண்டும். தொழில் நிலையைப் பொறுத்தவரையில் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறித்த கவலை அதிகரிக்கும்.
விருச்சிகம்: 
 • விசாகம் 4 நட்சத்திரம்: இந்த வாரம் நெருக்கமானவர்கள் கூட, உங்களது வாயைப் பிடுங்கி வம்புகளை உருவாக்க முயல்வர். மெளன விரதம் என ஏதாவது சொல்லி அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். அவர்களைத் தவிர்த்தால் மனதில் சந்தோஷம், அமைதி, நிதானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். குடும்பத்தைப்பொறுத்த வரையில் அப்பா மருத்துவமனை அருகில் தானே இருக்கிறது, நானே தனியாகச் சென்று வருகிறேன் என்பார். அம்மாவோ தானும் துணைக்குச் சென்றால் தான் ஆயிற்று என்று அடம் பிடிப்பாள். அவர்களை சமாளிப்பதற்கு நிதானமும், மிகவும் பொறுமையும் தேவைப்படும்.
 • அனுஷம் நட்சத்திரம்: இந்த வாரம் புதிய முயற்சிகள் குறித்துப்பேசலாம். ஆனால் அவசரம் கூடாது. அவசரப்பட்டால் தொழிலில் போட்டிகள், எதிர்ப்புகள், காரசாரமான விவாதங்கள், கூட்டாளிகளின் காலைவாரிவிடும் நடவடிக்கைகள் இருக்கத்தான் செய்யும். குடும்பத்தைப்பொறுத்தவரையில் மனைவி உங்களைப்பார்த்தாலே கடுகடு என முகத்தை வைத்துக்கொண்டு செலவுகளை அடுக்கிக்கொண்டே போவாள். பணம் கேட்பாள், தொழில் நிலையைப் பொறுத்தவரையில் உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் பணம் பஞ்சாய்ப் பறக்கிறது என்பர். வியாபாரிகள் லாபம் போதாது எனவும், கலைஞர்கள் வாய்ப்புகள் சரியில்லை என்பர்.
 • கேட்டை நட்சத்திரம்: இந்த வாரம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்சனைகளைப் பக்குவமாகச் சமாளிக்க வேண்டியது தான். பெண்களுடன் மோதல் உதவாது. அதிக நெருக்கமும் கூடாது. குடும்பத்தைப் பொறுத்தவரையில் பிள்ளைகள் புத்தகம், நோட்டு, உடைகள் வாங்கப் பணம் கேட்பார்கள். அவர்கள் கேட்கும் தோரணையிலிருந்தே எவை எவை அவசரச் செலவுகள் என்பது உங்களுக்கு புரிந்துவிடும். அவைகளுக்குத் தேவையான பணத்தை மட்டும் புரட்டிக்கொடுக்க வேண்டும். தினமும் மாலையில் ஆலயங்களுக்குச் சென்று தெய்வ பலத்தினைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். உறவினர்களின் வருகையினால் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு: 
 • மூலம் நட்சத்திரம்: இந்த வாரம் கூட்டாளிகள் சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் முறைத்தாலும், நீங்கள் பதிலுக்கு முறைத்துக்கொண்டு இருக்கக் கூடாது. குறைசொல்பவர்களிடம் நான் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள், சொல்லுங்கள் முடிந்தால் செய்து தருகிறேன் என்கிற ரீதியில் பேசவேண்டும். குடும்பத்தைப்பொறுத்தவரையில் குடும்பத்தில் வாக்குவாதங்கள், சண்டை-சச்சரவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். நீங்கள் மென்மையாகப் பேசினாலும் வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து வரும் பதில்கள் வன்மையாகத்தான் இருக்கும். தொழில்நிலையைப் பொறுத்தவரையில் தொழிலதிபர்கள் வெற்றிகள் விலகிப்போகிறது என்பர்.
 • பூராடம் நட்சத்திரம்: இந்த வாரத்தில் நீங்கள் எதைச்செய்ய வேண்டும் எனப்பெரியவர்கள், அனுபவசாலிகள் வழிகாட்டுவர். பண வசதிக்கு நாங்கள் இருக்கிறோம் என கூட்டாளிகள் உங்களை உற்சாகப்படுத்துவர். இதனால் தொழிலில் சீரான போக்கு காணப்படுவதுடன் லாப வரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குடுபத்தைப்பொறுத்த வரையில் அப்பாவும், அம்மாவும் அடுத்த ஊரில் உள்ள ஆலயங்கள், உறவினர்கள் வீடுகளுக்கு எப்போது அழைத்துச் செல்லப் போகிறாய்? என்று கேட்பர். மனைவி டாக்டரைப் பார்க்க வேண்டும் என்பாள். கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் விழாக்களில் அவர்கள் பரிசு வாங்குவதை பார்க்குமாறு அழைத்திடுவர். உங்களது இயலாமையைத் தெரிவித்தால், அவர்களது முகம் கோணுவதைப் பார்க்கமுடியாதுதான்.
 • உத்திராடம் 1 நட்சத்திரம்: இந்த வாரம் 21-ம் தேதி மற்றும் 22-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் அலைச்சல்களை ஏற்படுத்தக்கூடிய வேலைகளைத் தவிர்க்கலாம். இல்லையெனில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்துப்பார்த்து எடுத்து வைத்தால், பணநடமாட்டம் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள முடியும். தொழில்நிலையைப் பொறுத்த வரையில் உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் பணம் பறக்கிறது என்பர். வியாபாரிகள், தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள் பதட்டமாகக் காணப்படுவதுடன் எதையாவது குடைந்து கொண்டே இருப்பர்.
மகரம்: 
 • உத்திராடம் 2,3,4 நட்சத்திரம்: இந்த வாரம் உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு வீண் செலவுகளை இழுத்துவிட முயற்சிக்கலாம். ஆகையால் இந்த வாரம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய முடியும் என்பது குறித்து குறிப்புகள் தயாரித்து அதன்படி செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தைப் பொறுத்தவரையில் வாரம் முழுவதுமே உங்கள் பாக்கெட்டை காலிபாக்கெட்டாக காட்டிக்கொள்ள வேண்டும். அப்பா, அம்மா, மனைவிக்கான மருத்துவச் செலவுகளில் சிக்கனம் பார்க்கக்கூடாது. அவர்கள் அவர்களுடைய சொந்தப் பணத்தில் பரிகாரம் என்று சொல்லி ஆலயங்களுக்கு பணம் செலவு செய்வதையும் தடுக்கக் கூடாது.
 • திருவோணம் நட்சத்திரம் : இந்த வாரம் உதவாக்கரை விஷயங்களுக்காக கவலைப்படத் தூண்டும். இதனால் நெருக்கமானவர்களுடன் சண்டை-சச்சரவுகள், பெண்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது போன்ற பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தைப் பொறுத்தவரையில் தகுதிக்கு மீறிய ஆசைகள், வரவுக்கு மீறிய செலவுகள் எனும் மாயவலையில் விழுந்துவிடக் கூடாது. இவ்விஷயத்தில் வீட்டு விவகாரங்கள் அனைத்தையும் அப்பாவின் விருப்பப்படி செய்வது என முடிவு எடுத்துச் செயல்பட்டீர்கள் எனில் சரியாக வரும். பிள்ளைகள் சந்தோஷப்படும்படியாக அவர்களுடன் கனிவாகப் பேச வேண்டும். மாணவ-மாணவியர் விவாதித்துப் படிப்பார்கள். பாடம் நன்கு மனதில் பதிவதாகச் சொல்வர்.
 • அவிட்டம் 1,2 நட்சத்திரம்: இந்த வாரம் உடல் நலக் குறைவு, வீடு, வாகன வகையில் பிரச்சனைகள் ஏற்படலாம். சமாளிப்பீர்கள். கூட்டாளிகள் குரைத்தாலும், உங்களைப் பற்றி குறை புராணம் படித்தாலும், நீங்கள் பதிலுக்கு கனிவாகப் பதில்சொல்வது நல்லது. அவ்வாறு நடந்துகொண்டால் மட்டுமே தொழில் சுமாரான லாபத்துடன் நடக்கும். அவ்வப்பொழுது உருவாகும் நெருக்கடிகளை சமாளிக்க ஐடியாக்களும், நல்ல மனமுடையவர்களின் உதவிகளும் கிடைத்துக்கொண்டு இருக்கும். சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் பணத்தைக் கண்ணால் பார்ப்பதே அரிதாக இருக்கிறது என்பர். வியாபாரிகள் லாபமா பேசக்கூடாது என்பர்.
கும்பம்: 
 • அவிட்டம் 3,4 நட்சத்திரம்: இந்த வாரம் 21ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நீங்கள் நிச்சயமாக நடக்கும் என எதிர்பார்க்கும் வேலைகள் தடைபடும். கோபம் வரும் அடக்கிக்கொள்வது தான் நல்லது. நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துப் பேசுவீர்கள். மேலும் செய்வதைத் திருத்தமாக செய்ய முடியும். குடும்பத்தைப் பொறுத்தவரையில் உறவினர்கள் வழக்கம்போல் பல்லை இளித்துக்கொண்டும், தலையைச் சொறிந்துகொண்டும், உங்களைச் சுற்றி வருவர். அவர்களால் நிறைய வேலைகள் ஆக வேண்டி இருப்பதால் உங்களுக்கு வேண்டியதை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு வேண்டியதைக் கொடுங்கள்.
 • சதயம் நட்சத்திரம்: இந்த வாரம் பொதுக் காரியங்களில் சம்பந்தப்பட்டுத்தான் ஆக வேண்டும் எனும் சூழ்நிலை உருவாகும். அலைச்சல்தான், செலவுதான் என்றாலும் அலையும்பொழுதே உங்களது சொந்த வேலைகள் பலவற்றையும் சுலபமாக முடித்துக்கொள்ள முடியும். உங்களது அசதி, மறதி, பாதிப்புகளை நண்பர்கள், உறவினர்களால் சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் நிலையைப் பொறுத்தவரையில் சங்கடங்கள் வரும், போகும். என்றாலும், தொழில் லாபகரமாக நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வரவுகள் இனிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் பாராட்டினைப் பெறுவர். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கலாம்.
 • பூரட்டாதி 1,2,3 நட்சத்திரம்: இந்த வாரம் குடும்பத்தைப் பொறுத்தவரையில் வீட்டில் அமைதி, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே வேண்டிய அளவுக்கு கிடைத்தாக வேண்டும். கிடைக்குமா? எனில் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் உருவாகிக் கொண்டல்லவா இருக்கிறது. நீங்களும் என்ன செய்வீர்கள். குடும்பத்தினரால் என்ன செய்ய முடியும். அவர்களால் உங்கள் மனதும், உடல் நலமும் படுத்தப்படும். அவ்வளவுதானே. அவர்கள் கொடுக்கும் தொல்லைகளை அன்புத் தொல்லைகளாக கருதி ஒதுக்கிவிடுங்கள். தொழில் நிலையில் கலைஞர்களுக்கு விருதுகள், பாராட்டுக்கள், வெளிநாட்டுப் பயணங்கள் என நல்ல செய்திகள் வரும்.
மீனம்: 
 • பூரட்டாதி4 நட்சத்திரம்: இந்த வாரம் காரியத்தடைகள் விலகி நினைத்தது நடக்க பெரியவர்கள், அனுபவசாலிகள் மற்றும் கூட்டாளிகள் துணைபுரிவர். மேலும் பொன்-பொருள் சேர்க்கைக்கும் உதவுவர். தரும காரியங்கள், பொதுக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரையில் வீட்டுக்கு இந்த வாரம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கு லிஸ்ட் எடுத்துக்கொண்டு அவைகளை உங்கள் போக்கில் செய்து கொண்டு இருந்தால் அப்பா முதல் கடைக்குட்டி வரை எல்லோருமே சந்தோஷப்படுவார்கள். எல்லோருக்குமே வேண்டியது கிடைக்கும். தொழில் நிலையைப் பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் நம்பகமான தொண்டர்களால் ஆதாயமடைவர்.
 • உத்திரட்டாதி நட்சத்திரம்: இந்த வாரம் மன உளைச்சல், கலக்கம், காரியத் தடைகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கும். ஆகையால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டால், புதிது புதிதாக முளைக்கும் பிரச்சனைகளை நல்ல அனுபவங்களாகக் கருதி சுமூகமாக சமாளிக்கலாம். 19ம் தேதி மற்றும் 21ம் தேதிகளில் பண வரவுகள் ஏற்படலாம். குடும்பத்தைப் பொறுத்தவரையில் அப்பாவும், அம்மாவும் வீட்டைத் திருத்திக் கட்டுவது, புதிய வீட்டு மனைகளை வாங்குவது குறித்து பேசுவர். மனைவி புடவை, நகை என்பாள். அவளது சேமிப்பில் வாங்கிக்கொள்வதாக இருந்தால் சரி என்று சொல்லிவிடலாம். தொழிலை லாபகரமாக நடத்திச் செல்ல முடியும். சின்னச்சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சமாளிக்கலாம்.
 • ரேவதி நட்சத்திரம்: இந்த வாரம் குடும்பத்தைப் பொறுத்தவரையில் வீட்டில் உள்ளவர்கள் உங்களிடம் செலவுக்கு பணம் கேட்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொள்வர். உங்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். பிள்ளைகள் தொண தொணத்துக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் மீது எரிந்துவிழாமல், அவர்களுக்கு என்னென்ன செய்துகொடுக்க முடியுமோ அவைகளை செய்து கொடுத்துவிட வேண்டும். உறவினர்கள் வருகிறார்கள் என்றால் உங்களால் பல காரியங்கள் அவர்களுக்கு ஆக வேண்டி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவித்தான் ஆகவேண்டும் எனும் நிலை காணப்படுகிறது. அவர்களது உதவியுடன் உங்களது வேலைகளை முடித்துக்கொள்ளப் பார்க்க வேண்டும்.