இன்றைய ராசி பலன்

நாள்: 
Sunday, 10 February, 2013
மேஷம்: 
 • வாடகை இடத்தைவிட்டு சொந்த இடத்திற்கு கடையை மற்றும் யோகம் ஒருசிலருக்கு ஏற்படலாம். உங்களுக்கென தனி வழிவகுத்துக்கொள்வீர்கள். கஷ்டம், நஷ்டம் ஏற்பட்டாலும் கொள்கையையும், பிடிவாதத்தையும் விட்டுக்கொடுக்கமாட்டீர்கள்.
ரிஷபம்: 
 • தத்துவங்களையும், வேதாந்தங்களையும் பேசுவீர்கள். சமயத்தில் குடும்பத்தையும் கூட வெறுப்பீர்கள். என்றாலும், பெற்றோரின் ஆதரவு தொடர்ந்து இருந்துவரும் என்ற போதிலும் உங்களுடைய செயல்பாடுகளில் மந்தநிலை காணப்படலாம்.
மிதுனம்: 
 • மற்றவர்களைப் போல பணப்பற்றாக்குறை ஏற்படாது. தே சமயத்தில் பணத்தேக்கத்திற்கும் இடம் இருக்காது. உங்களின் தேவைகளுக்கு ஏற்ப பணம் உங்களிடம் வநத்உ சேரும். உணவு, ஸ்டேஷனரி, எலக்ட்ரிக்கல்ஸ் உதிரிபாகங்களால் ஆதாயம் கிடைக்கலாம்.
கடகம்: 
 • பொருளாதார வகையில் இதுவரையிலும் காணப்பட்ட சூழ்நிலை மாறி வரவுக்கு மேல் இன்று செலவாகும். அதே சமாளிக்கவும், பட்ஜெட்டை சரிக்கட்டவும், தராதரம் எல்லாம் பாக்க்ஆமல் பத்துவட்டிக்கும், மீட்டர் வட்டிக்கும் கடன்வாங்க நேரிடும் என்றாலும் கெளரவம் பாதிக்காது. 
சிம்மம்: 
 • குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி, பிரிந்திருந்தவர் இணைந்து வாழும் யோகம் உண்டாகலாம். அல்லது கணவன் அல்லது மனைவி வகையிலோ எதிர்பாராத பண உதவி ஏற்பட்டு கடன்களை பைசல் பண்ணிவிடலாம். 
கன்னி: 
 • சிலர் குறைந்த வட்டிக்குக் கடனை வாங்கி, அநியாய வட்டிக்கு கடனை அடைக்கலாம். உடல்நிலையில் சிறிது பாதிப்பும், வெற்றி தோல்வி மாறி-மாறி வருவதுமாகத்தான் இருக்கும். மிகநெருக்கமாக பழகியவர்களே, உங்களை ஏமாற்றலாம்.
துலாம்: 
 • எந்த காரியத்தையும் எடுத்துக்கொண்டாலும் அதை வேகமாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க விரும்பி, அதற்காக கடுமையான பிரயாசையையும், முயற்சிகளையும் எடுப்பீர்கள். உங்களின் விடாமுயற்சி உங்களை உயர்த்தும்.
விருச்சிகம்: 
 • தொழிலில் சில நெருக்கடிகளை சமாளிக்க வேண்டும். உங்கள் கனவுகளும், திட்டங்களும் படிப்படியாக நாளுக்கு நாள் முன்னேற்றமும், வெற்றியும் அடையும். உங்களுடைய காரியங்களில் தடை ஏற்பட்டாலும் சமாளித்துக்கொண்டு செய்துமுடிப்பீர்கள். 
தனுசு: 
 • மக்கள் நலம், வாழ்க்கைத் துணைநலம், தந்தை நலம், தாயின் நலம் எல்லாம் சீராக இருக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வழக்கத்தைவிட மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள்.
மகரம்: 
 • உங்களின் பேச்சாற்றல்கூடும். மனதில் உற்சாகம் உண்டாகும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடும், ஆர்வமும், அக்கறையும் உருவாகும். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும். கொடுக்கல்-வாங்கல் சிறக்கும். புதியவவ்களின் அறிமுகமும் நட்பும் உண்டாகும்.
கும்பம்: 
 • உங்களின் ஆதரவாளர்களின் ஆதரவும், அனுகூலமும் பெருகும். செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும். வாக்கு, தனம், குடும்பம், கல்வி, தாய், சுகம், பூமி, வீடு, வாகனம் ஆகியவற்றில் வசதிவாய்ப்புகள் அதிகரிக்கும்.
மீனம்: 
 • குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும், மங்களகரமான சடங்குகளும் நிறைவேறலாம். ஒருசிலருக்கு வீடு, வாகனம், பிளாட் வகைக்காக கடன் வாங்கும் யோகம் ஏற்படலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் கை கூடி வரலாம்.