முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: அணியில் மாற்றம் இல்லை

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், மார்ச்.7 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க இருக்கும் கடைசி 2 டெஸ்ட் போட்டிக் கான இந்திய அணியில் மாற்றம் இருக் காது என்று தெரிய வருகிறது.  மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற் றுப் பயணம் செய்து தோனி தலைமை யிலான இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்து விட்டன. 

சென்னையில் நடைபெற்ற முதல் டெ ஸ்ட் மற்றும் ஐதராபாத்தில் நடந்த 2-வ து டெஸ்ட் ஆகியவற்றில் இந்தியா வெ ற்றி பெற்று இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலி மற்றும் டெல்லி யில் 3 -வது மற்றும் 4 -வது போட்டிகள் நடக்க இருக்கிறது. 

சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. 2 -வது டெஸ்டி ல் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 135 ரன் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதல் 2 டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி    டெஸ்டுக்கான இந்திய அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது. 

சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு க் குழுவினர் கடைசி 2 டெஸ்டுக்கான இந்திய அணியை தேர்வு செய்கின்றனர். 

முதல் 2 டெஸ்டில் இந்திய அணி சிறப் பாக ஆடி அபார வெற்றி பெற்றதால் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிய வருகிறது. 

தொடக்க வீரர் சேவாக் நீக்கத்தில் இருந்து தப்புகிறார். அவர் ஆஸ்திரேலியா வுக்கு எதிரான தொடரில் 2 டெஸ்டில் 27 ரன்களே எடுத்தார். 

சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்சி ல் அவர் துரதிர்ஷ்டமாக அவுட்டனார். ஆனால் 2-வது இன்னிங்சில் அவர் 50 ரன் இலக்கை எடுக்க முடியாமல் எளி தில் ஆட்டம் இழந்தார். 2 - வது டெஸ் டில் முதல் இன்னிங்சில் 6 ரன்னில் அவு ட்டானார். 

இதனால் 3 -வது மற்றும் 4 -வது டெஸ் டில் சேவாக் நீக்கப்பட்டு காம்பீர் சேர்க் கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் தேர்வுக் குழுவினர் அவரு  க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார் கள் என்று தெரிய வருகிறது. இந்த டெ ஸ்ட் தொடர் சேவாக்கிற்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 14 -ம் தேதி துவங்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago