முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2013-2014 பட்ஜெட்: நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - 2013-14 -ம் ஆண்டுக்கான  தமிழக பட்ஜெட் வரும் 21-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் ரோசய்யா உரையுடன் பிப்.1ம் தேதி தொடங்கியது. 8-ம் தேதிவரை நடந்த இக்கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 21-ம் தேதி தொடங்குகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிவிப்பில் 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு தமிழக சட்டமன்றப் பேரவைக் கூடும் என்றும், அன்று காலை 2013-2014-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவையில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

21-ந்தேதி  காலை 10.30 மணிக்கு  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2013-14-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அன்றைய தினம் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும். முதலில் பட்ஜெட் மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெறும். அதன்பிறகு துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படும். ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். புதிய சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்