முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணத்திற்குமுன் சாவேஸின் கடைசி வார்த்தைகள்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

காரகாஸ்,மார்ச்.8 - ஒருவரின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம்... ஆனால் இறப்பு என்பது சரித்திர நிகழ்வாக இருக்கவேண்டும். இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ். புற்றுநோயோடு போராடிய ஹியூகோ சாவேஸ், செவ்வாய்கிழமை மரணமடைந்துவிட்டார். சாவேஸின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் தங்களது தலைவன் இறந்து போனதைத் தாங்க முடியாமல் மக்கள் கதறியழுவதை தொலைக்காட்சி காமிராக்கள் காண்பித்துக்கொண்டிருக்கின்றன.தலைநகரம் காரகாஸில் நாளை நடைபெறவிருக்கும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று வெனிசுலா எதிர்பார்க்கிறது.புற்று நோயுடன் போராடினாலும் சாவேஸ் மாரடைப்பில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நான் மரணிக்க விரும்பவில்லை என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தை என்று உயிர் பிரியும் தருணத்தில் அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மரணத்தின் கடைசி தருணத்தில் அவர் பேசிய வார்த்தைகள் மக்கள் மீது கொண்ட பாசத்தையும், வெனிசுலா நாட்டின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago