இன்றைய ராசி பலன்

நாள்: 
Saturday, 30 March, 2013
மேஷம்: 

உங்கள் வாழ்க்கை நிலை மிகமிக உயரும். பண நடமாட்டம் தாராளமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். எந்தக் காரியமும் தடைபடாது. நிதானமாக சிந்தித்து செயலாற்றலாம்.

ரிஷபம்: 

ஒரு சிலருக்கு புதிதாக வாகனம் வாங்கவோ அல்லது புது வீட்டில் குடிபோகவோ வாய்ப்பு கிட்டும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கையும் உண்டு. உங்கள் உடன் பிறந்தவர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

மிதுனம்: 

உடன் பிறந்தவர்களின்அந்தஸ்தும், தகுதியும் உயர்வடையும். உங்கள் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தொழில் வகையில் இருந்து வந்த போட்டிகள் விலகி தொழில் உயர்வடையும்.

கடகம்: 

தன்யார் துறை பணியாளர்கள் ஊதிய உயர்வைப் பெறமுடியும். அரசுப் பணியாளர்கள் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவர். பதவி உயர்வுகளும் கிடைக்கலாம். சுய தொழில் லாபம் கூடும்.

சிம்மம்: 

எதைத் தொட்டாலும் விரையமாக இருக்கும். வரவுகள் குறையும். புதிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் மனக்கவலைகள் உண்டாகும். தனியார் துறை பணியாளர்கள் மிகவும் கவனமுடன் பணிபுரிய வேண்டியது அவசியம்.

கன்னி: 

வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சிறப்பைத் தரும் பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். எந்தக் காரியத்தில் இறங்கினாலும் வெற்றி மேல் வெற்றி உங்களை வந்தடையும். கூட்டுத் தொழில் உயர்வடையும்.

துலாம்: 

உங்களின் மன தைரியம் குறையும். மனதில் ஒருவித கவலை குடிபுகும். உங்கள் கெளரவத்தை பாதிக்கக்கூடிய ஏதேனும் ஒரு சம்பவம் நிகழக் கூடும். பெண்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விருச்சிகம்: 

குழந்தைகள் உடல் நலம் சம்பந்தப்பட்ட வகையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வகையிலும் சிறு சிறு தடைகளும், இடையூறுகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கலாம்.

தனுசு: 

சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொய்பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். தொழில், வியாபாரம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட வகையிலும் இடையூறுகள் ஏற்பட இடமிருக்கிறது.

மகரம்: 

தொழில்- வியாபாரம் சம்பந்தப்பட்ட வகையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது போகலாம்.குடியிருக்கும் வீட்டை விட்டு வேறு ஊருக்கோ செல்ல வேண்டிய அவசியம் ஏற்படலாம். வாகனம், கால்நடை சம்பந்தப்பட்ட வகையில் செலவுகள் ஏற்படலாம்.

கும்பம்: 

இன்று நீங்கள் உங்கள் சிந்தனைபடியே செயல்பட வேண்டும். அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு அதன்படி நடக்க ஆரம்பித்தால் ஏதேனும் ஒரு சிக்கலில் வகையாக மாட்டிக் கொண்டு விடுவீர்கள்.

மீனம்: 

கணவன்-மனைவி உறவில் சுமூகமான சூழ்நிலை உண்டாக இடமில்லை. உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவைகளும் உண்டாக இடம் இருக்கின்றது.