முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக தேர்தல்: பிரதமர் - சோனியா - ராகுல் பிரசாரம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.15 - கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். கர்நாடக மாநில சட்டசபைக்கு வரும் மே மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே மாதம் 8-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முக்கிய கட்சிகளான ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பாக 177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதிப்பேர் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கியுள்ள புதிய கட்சியான கர்நாடக ஜனதா கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்கலாம் என்று தெரிகிறது. 

இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். ராகுல் காந்தி வருகின்ற 26,30, மே மாதம் 2 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதனையடுத்து சோனியா காந்தி வருகின்ற23,28,மே 1 ஆகிய தேதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார். வருகின்ற 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். ஹூப்ளி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் நடக்கவுள்ள காங்கிரஸ்  தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்