முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி - மு.க.ஸ்டாலின் மீது வக்கீல் கமிஷனரிடம் புகார்

சனிக்கிழமை, 25 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.26 - தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகன் மு.க.ஸ்டாலின் மீது உயர்நீதிமன்ற வக்கீல் பி.வி.செல்வகுமார் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 19.5.2013 ஆம் தேதியன்று தி.மு.க. கட்சியின் சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் அதன் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தி.மு.க. கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகிய இரு வாரிசு தலைவர்களும் மற்றும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும் இருந்தனர். அந்த கூட்டத்தில் காரல் மார்க்ஸ் என்ற தி.மு.க. பெண் பேச்சாளர், ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் என்று பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது சம்பந்தமான செய்தி 26.5.2013 நாளிட்ட வாரம் இருமுறை வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் மேற்படி காரல்மார்க்ஸ் புகைப்படத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும், கொலைவெறி நோக்கத்தோடு பேசிய காரல் மார்க்ஸ் மீதும், அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும், மேற்படி காரல் மார்க்ஸ் தொடர்புடைய பயங்கரவாத சக்திகளின் தொடர்பை தீர விசாரித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறுஅந்த புகாரில் வக்கீல் செல்வகுமார் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்