முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலார் ஊழல்: கேரள சட்டசபையில் கூச்சல் - குழப்பம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.10 - கேரளாவில் சோலார் ஊழல் விவகாரத்தை சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பி முதல்வர் உம்மன் சாண்டியை ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதனால் நேற்று இரண்டாவது நாளாகவும் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபை பல முறை ஒத்திவைக்கப்பட்டது. 

கேரளாவில் சோலார் கருவிகள் பொருத்துவதில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இந்த ஊழல் குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயரை முதல்வர் உம்மன்சாண்டி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சோலார் ஊழலில் உம்மன்சாண்டிக்கும் தொடர்பு உள்ளது. அதனால் முதல்வர் பதவியில் இருந்து உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

சோலார் ஊழலையொட்டி முதல்வர் பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளைஞர் பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்து சபையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவரக்கோரி நோட்டீசு கொடுத்தனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி.திவாகரன் பேசும்போது சோலார் ஊழலுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்வர் பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். சோலார் திட்டம் தொடர்பாக சரிதா நாயருடன் முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து பேசினேன் என்று ஸ்ரீதரன் நாயர் கூறியுள்ளார். இந்த சந்திப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி நடந்தது என்று மலையாளம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் ஸ்ரீதரன் நாயர் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் உம்மன்சாண்டி,  ஸ்ரீதரன் நாயரை சோலார் சம்பந்தமாக நான் சந்திக்கவில்லை கல்குவாரி விஷயமாக பிரதிநிதிகளுடன் வந்த ஸ்ரீதரன் நாயரை சந்திதித்தேன் என்றார். சோலார் ஊழல் புகார் விஷயத்தில் எதிர்க்கட்சிகளை ஆளும் கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து சந்திப்பதோடு எதிர்க்கட்சிகளின் சதித்திட்டத்திற்கு நாங்கள் ஆளாகமாட்டோம் என்றும் கூறிய உம்மன்சாண்டி, பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டேன் என்றார். இதனையொட்டி சபையில் கூச்சல் குழப்பம் நிலவியில் நேற்றும் சபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்