முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா பிரச்சனை: பாராளு மன்றத்தில் அமளி

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.13 - இந்திய எல்லையில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், தெலுங்கானா பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது. பாரளுமன்றம் 3 நாள்களுக்குப் பிறகு  மீண்டும் நேற்று கூடியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம், தெலுங்கானா பிரச்சனை, கேரளத்தில் நடந்த சூரியஒளி மின் தகடு ஊழல் உள்பட பல்வேறு விவகாரம்  தொடர்பாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சனைகளை கிளப்பினார்கள்.

பாராளுமன்றம் நேற்று கூடியதும், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம், பதற்றம் காரணமாக கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காஷ்மீர் கலவரம், ராபர்ட் வதேரா நிலமோசடி விவகாரத்தை அவர்கள் கிளப்பினார்கள்.

 கேரளத்தில் நடந்த சூரியஒளி மின் தகடு ஊழல் உள்பட பல்வேறு விவகாரம்  தொடர்பாக கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று  இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த  கூச்சல் குழப்பம் காரணமாக 12 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது. 12 மணிக்குப் பிறகு சபை மீண்டும் கூடியதும், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக சபையில் அமளி ஏற்பட்டதால் சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  இதே மாதிரியான பிரச்சனையால் ராஜ்ய சபையில் அமளி ஏற்பட்டதால் சபையை அவைத்தலைவர் அன்சாரி 15  நிமிடம் ஒத்திவைத்தார்.  சபை மீண்டும் கூடியதும், தொடர்நது அமளி ஏற்பட்டது.

தனி தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அப்போது சபையை நடத்திய குரியன் கையெடுத்து கும்பிட்டு சபையை நடத்த அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபையும் பிற்பகலில் ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago