மின்சாரம் தாக்கி பலி: முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

 

சென்னை, ஆக.8 - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எரியோடு பேரூராட்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்க்கு இரங்கல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதி உதவியை முதல்வர் ஜெயலலிதா இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது

17.8.2013 அன்று திண்டுக்கல்  மாவட்டம், வேடச்சந்தூர் வட்டம், எரியோடு பேரொட்சியைச் சேர்ந்த திரு. ஆ.சுப்பிரமணி என்பவர் 17.8.2013 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை  அறிந்து  நான்  மிகவும்  துயரம் அடைந்தேன். 

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சுப்பிரமணி  குடும்பத்திற்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் எரியோடு பேரூராட்சியைச் சேர்ந்த  நீலமேகம் என்கிற முனியப்பன், நாகராஜன், மூர்த்தி மற்றும்  சீனிவாசன் ஆகியோர் காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து நான் வருத்தமடைந்தேன்.

இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும்  நான் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 இந்தத் துயரச் சம்பவத்தில்   உயிரிழந்த சுப்பிரமணி குடும்பத்திற்கு  ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.