ஆதார் அட்டை: பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது

 

புதுடெல்லி,அக்.10 - சமூக நல திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் அடங்கிய அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. 

இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 23_ம் தேதி பிறப்பிக்த உத்தரவில் எந்த மாற்றமும் தற்போதையநிலையில் செய்ய முடியாது. அதே சமயம் உத்தரவில் மாற்றம்கோரி மத்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அருணாராய் போன்றவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியது. 

திருமணம், வருங்கால வைப்பு நிதி  சொத்துப் பிரிவு போன்றவற்றை பதிவு செய்ய ஆதார் எண் அடங்கிய அடையாள ஆவணம் அவசியம் என்று சில மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. அரசின் மானியத் திட்டங்களைப் பெறவும் ஆதார் ஆவணங்கள் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டஸ்வாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நலத் திட்டங்களைப் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில்  பொதுத்  துறை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாக்கல் செய்த மனுவில் ஆதார் ஆவணம் தொடர்பான உத்தரவில்  மாற்றம் செய்ய வேண்டும்  என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதிகள் சவுகான், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கூலம் வாகனவதி முன் வைத்த வாதம்:

கோர்ட் உத்தரவால் பல்வேறு விளைவுகள்  ஏற்படும். ஆதார் எண் ஆவணத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 40 ஆயிரம் கோடியை சமையல் எரிவாயு மானியத்துக்காக மத்திய அரசு ஒதுக்குகிறது. ஆதார் எண் ஆவணத்தை வைத்திருப்போருக்குத் தான் எரிவாயு கிடைக்கும் என்ற நிலை உருவானால் ஓரளவுக்கு போலிகள், உரிய ஆவணம் இல்லாதவர்கள் அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும் நிலை தடுக்கப்படும். 

பொதுவாக குடும்ப அட்டை தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அட்டையைக் கூட சிலர் போலியாகத் தயாரித்து மோசடி செய்கின்றனர்.  ஆனால் ஆதார் எண் ஆவணம் மிகவும் நம்பகத்தனமானது. போலியாகத் தாயரிக்க முடியாதது. அனைத்து அரசின் திட்டங்களையும் அந்த  எண்ணைக் கொண்டு அறிய முடியும். இப்போதும் கூட ஆதார் எண்ணை குடிமக்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே அரசு கருதுகிறது. ஆனால மானிய திட்டங்களைப் பெற அந்த ஆவணம் தேவை என்று வலியுறுத்துகிறது. இதுதொடர்பாக சில ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதால்  கோர்ட் பிறப்பித்த உத்தரவை மாற்ற வேண்டும் என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள்  கூறியது:

ஆதார் எண் ஆவணத்தை அனை த்து குடிமக்களுக்கும் வழங்கி முடிக்க பல காலம் ஆகும். என்பதை மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு அது ஒதுக்கப்படாத நிலையில் திட்டத்தின் பலனைப் பெற ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது இதுதொட

ர்பாக கோர்ட் பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆதார் அட்டை வழங்கும் இந்திய தனித்துவ ஆணையத்துஏக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வகை செய்யும் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் பாராளுமன்ற கூட்டத்  தொடரில் இந்த மசோதா தாக்கஏல் செய்யப்படும் என்று தெரிகிறது.