Idhayam Matrimony

ஊழலுக்கு எதிரான ராகுலின் நடவடிக்கையில் நேர்மை இல்லை

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப்.24 - ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கையில் நேர்மை இல்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஊழலுக்கு எதிரான வசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்த புகாருக்கு பதில் அலிக்கும் வகையில்  அக்கட்சி இந்தக் குற்றசாட்டை தெரிவித்துள்ளது.டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஊழலுக்கு எதிகான சில மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். அதற்கு எதிர்க்கட்சிகள் காரணமல்ல. காங்கிரஸ் கட்சி உருப்பினர்களால்தான் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அவர்களை காங்கிரஸ் கட்சி கட்டுப்படுத்தவில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கட்சியில் வந்துள்ள நபர் ராகுல் காந்தி.கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் குறித்து அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் தறபோது அவர், ஊழலுக்கு எதிராக தாங்கள் செயல்படுவதாக கூறுகிறார்.

ஊழலுக்கு எதிரான ராகுலின் நடவடி்கையில் நேர்மை இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்றுள்ளம. அப்போது காங்கிரஸ் துணைத் தலைவர் அதுகுறித்து பேசவில்லை.

100 எலிகளைத் தின்றபிறகு பூனை ஒன்று, புனிதப் பயணம் செல்வது போல் இருக்கிறது ராகுலின் தற்போதைய நடவடிக்கை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஊழல் , நிலக்கரி, சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல், காமன்வெல்த் முறைகேடு, ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு முறைகேடு, ஹெலிகாப்டர் பேர ஊழல் உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. அப்போது ராகுல் காந்தி ஊழல் குறித்து என் பேசவில்லை? ஊழலுக்கு எதிராக அவசரச் சட்டம் கொணடு வரப்பட்டால், அதனை எங்கள் கட்சிஆதரிக்காது. ஏனெனில் தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெரவில்லை. மத்தியில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் மாற்றங்களைக் கொணடி வரும். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குறைந்த அளவு பணிகளே நடைபெற்றுள்ளன. இத்ற்கு மத்தியில், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதே காரணமாகும் என்று சுஷ்மா ஸ்வராஜூம், அருண் ஜேட்லியும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்