முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச போப்பாண்டவருக்கு அழைப்பு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.15 - அமெரிக்க நாடாளுமன்றத்தில் போப் பிரான்சிஸ் பேசுவதற்கு முதல் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருக்கும் போப் பிரானசிஸ் அடுத்த ஆண்டு முதல் முறையாக  அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். அப்போதி, நாடாளுமன்றத்தின் இரு அவைக்கூட  கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் அடுத்த ஆண்டு செப்டம்பரில்  உலக கத்தோலிக்கர்கள் மாநாடு நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் போப் பிரான்சிஸ், நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்திலும் பங்கேற்று உரை நிகழ்துகிறார். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நகர மேயர்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுளது என்று  அமெரிக்க நாடாளுமன்ற சபா நாயகர் ஜான் போஹ்னர் நேற்று வாஷிங்டனில் கூறினார்.

போப்பாண்டவராக பிரான்சிஸ் பொறுப்பெற்று நேற்றுடன் ஒராண்டு நிறைவு பெற்றது குறிபிடத்தக்து. இதற்கு முன் போப் இரண்டாம் ஜான்பால் கடந்த 1979-ஆம் ஆண்டும், போப் பென்டிக்ட் 2008-ஆம் ஆண்டும் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்