முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கிழக்கு கோபுர கும்பாபிஷேகம்

வியாழக்கிழமை, 20 மார்ச் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச்.21 - மதுரையில் கடந்த டிசம்பரில் பெய்த மழையின்போது இடிதாக்கி சேதமடைந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கிழக்குக் கோபுரக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் கி.பி.1216 ல் கட்டப்பட்டது. சுமார் 150 அடி உயரமுடைய இக்கோபுரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி இரவில் இடிதாக்கியது. இதில் கோபுரத்தின் வலது பக்க யாழி முழுமையாகச் சேதமடைந்தது. திருக்கோயில் தக்கார் கருமத்து தி கண்ணன் ஆலோசனையின் பேரில் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ஜெயராமன் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பகுதியைச் சீரமைத்தார். இதையடுத்து லகுகும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்திற்கு அருகே அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்கிழமை இரவு பூஜைகள் தொடங்கின. 9 குண்டங்கள் வைத்து புனிதநீர் பூஜை செய்யப்பட்டது. 

தங்கம், வெள்ளி கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டன. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் பூஜைகள் நடந்தன. புதன்கிழமை காலை பூஜையிலிருந்த 9 புனிதநீர்க் கலசங்களையும் 9 சிவாச்சாரியர்கள் தலையில் வைத்து கோயிலை வலம் வந்தனர். பின்னர் கிழக்குக் கோபுரத்தில் ஏறி அங்குள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றி காலை 9.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தினர். இதை கிழக்குச் சித்திரை வீதி, ஆடி வீதிகளில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்