முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, மார்ச்.25 - திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் ஆகிறது. பெருமாளை தரிசிக்க தர்ம தரிசனத்தில் 24 மணி நேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்துக்கு 10 மணி நேரமும் ஆனது. ரூ.300 விரைவு தரிதன பக்தர்கள் 8 மணி  நேரம் காத்திருந்தனர்.

பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால்  ரூ.300 விரைவு தரிசனம் இரவு வரை நீட்டிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி தர்ம தரிசன பக்தர்கள் 31 காத்திருப்பு அறைகளைக் கடந்து, 2 கி.மீ. தொலைவிலும், நடைபாதை பக்தர்கள் 15 காத்திருப்பு அறைகளைக் கடந்து அரை கி.மீ. தொலைவிலும் ஏழுமலையானை  தரிசிக்க காத்திருந்தனர். தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு மார்ச் மாதம் 30-ம் தேதி உகாதி ஆஸ்தானம் நடத்த உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆண்டுதறும் தெலுங்கு வருட பிறப்பான உகாதி அந்று ஏழுமலையான் கோவிலு க்குள் உள்ள உற்சவ மூர்த்திகள் தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து புது வஸ்திரம் அணிவித்து புதிய. பஞ்சாங்கத்தை படிப்பர்.

பின்னர் சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடைபெறும். சுப்ரபாத சேவைக்குப் பிறகு தோமாலை அர்ச்சனை   தனிமையில் நடத்தப்படும். மார்ச் 30-ம் தேதி ஊஞ்சல் சேவை, ஆரிஜித பிரம்மோற்சவம் முதலிய சேவைகளை  தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago