முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவயானி மீது குற்றப்பத்திரிகை: சி.பி.ஐ. முடிவு

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.6 - அமெரிக்க முன்னாள் தூதர் தேவயானி மீது ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.முடிவு செய்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள  இந்திய தூதரகத்தில் துணை தூததராக பணியாற்றி வந்தவர் தேவயானி கோப்ரகடே. இவர் மீது இவரது வீட்டில் பணிபுரிந்த வேலைக்காரப் பெண் தன்னை தேவயானி கொடுமைப்படுத்தியதாக புகார் கூறினார். இதையடுத்து தேவயானி கைது செய்யப் பட்டார். தூதருக்கு உள்ள சட்ட பாதுகாப்பை மீறி அமெரிக்க போலீஸ் அத்து மீறியதாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதை அமெரி்க்கா மறுத்தது. இதனால்  இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே பலியான ராணுவ வீரர்களுக்கு  புகார் எழுந்துள்ளது. தேவயானி்க்கு ஏற்கெனவே மும்பையில்  வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து அவர் ஆதர்ஷ் குடியிருப்பில் வீடு வாங்கியிருப்பதாக இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. தெரிவி்த்துள்ளது. இதையடுத்து  மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் விதிமுறைகளை மீறி வீடு வாங்கியிருப்பதாக தேவயானி, அவரது தந்தை மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்