முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்கள் அவதி: திருப்பதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஏப்.7 - திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு இப்போது தலைதூக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் நிலமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவது உண்டு . இவர்களுக்கு தினமும் 32 லட்சம் கலோரி தண்ணீர் தேவைப் படுகிறது. மழைகாலங்களில் 1369 மில்லி மழை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு 1056 மில்லி மழையே பெய்தது. இதனால் திருமலையில் உள்ள பல நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைந்து வருகிறது. ஆகாய கங்கை வறண்டு விட்டது.

கோகர்ப்பம் நீர்த்தேக்கம் குட்டை போல் காட்சி அளிக்கிறது.பாபவிநாசனம், பகபுதாரா, நீர்த்தேக்கத்தில் 35 சதவீதம் தண்ணீரே இருப்பு உள்ளது. இதனால் திருமலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பக்தர்களுக்கு வழங்கும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள விடுதிகளில் தினமும் 35 ஆயிரம் பக்தர்கள் தங்க அறைகள் உள்ளது. இவர்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது இது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்