முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் 12-ந் தேதி வசந்த உற்சவம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஏப்.8 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக வரும் 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது உண்டு.

இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் விழா வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. 14-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் போது சுவாமிக்கு மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும். 

விழாவையோட்டி 12-ந் தேதி காலை 8 மணிக்கு உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் உலா வருகிறார். பின்னர் கோவில் பின்புரம் உள்ள உற்சவ மண்டவத்தில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடக்கிறது. 2-வது நாள் மாலையில் சாமி தேவியருடன் தங்க ரதத்தில் பவனி வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்றும் மூலிகை திரவிய அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

3-வது நாள் விழாவில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவியுடன் மலைச்சாமி, ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீகிருஷ்ணன், ருக்மணி ஆகிய சுவாமிகள் மாட வீதியில் வலம் வந்து வசந்த மண்பத்தில் எளுந்தருளிச் செய்து திருமஞ்சனம் செய்யப்படுகிறது. வசந்த உற்சவத்தையோட்டி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யான உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜீத் பிரமோர் சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை, போன்ற கட்டண சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

இறுதி நாளான 14-ந் தேதி விசேஷ பூஜையும் ரத்து செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்