முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளத்தில் 2யூனிட் அமைக்க ஒப்பந்தம் செய்ய அனுமதி

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.9 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4வது யூனிட் தொடங்குவது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அணுசக்தி துறைக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அணுசக்தி துறையின் பெயர் கூறவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் இந்த ஒப்புதல் கடந்த வார இறுதியில் கிடைத்தது. எனவே இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எங்களுக்கு தடையேதும் இல்லை என்றார்.

 

இந்நிலையில் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணு மின்சார கழகம், இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதியை இருதரப்பு அதிகாரிகளும் முடிவு செய்வார்கள். இம்மாதத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத் தாகும் என்று அந்த அதிகாரி கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யா சென்றபோது, கூடங்குளத்தின் 3 மற்றும் 4வது யூனிட் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. என்றாலும் அணுஉலை விபத்து இழப்பீடு தொடர்பாக இரு நாடுகள் இடையே உடன்பாடு ஏற்படாததால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதையடுத்து இரு நாடுகளிடையே நடைபெற்ற தொடர் பேச்சுவார்த் தைக்குப் பிறகு இப்பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்