முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மாவை நம்பினால் ஆண்டவனை நம்பினமாதிரி: விந்தியா

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

ஊட்டி, ஏப்.10 _ அம்மாவை நம்பினால் ஆண்டவனை நம்பியமாதிரி என ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடிகை விந்தியா பேசினார். நீலகிரி பாராளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க.,வேட்பாளர் டாக்டர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்து ஊட்டியில் பிரச்சாரம் நடைபெற்றது. ஊட்டி ஐந்துலாந்தர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் திரைப்பட நடிகை விந்தியா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:_

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் சி.கோபாலகிருஷ்ணன் நல்லமனிதர். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் ஊரும், நாடும் நன்றாக இருக்கும். ஆனால் மாற்றுகட்சியான தி.மு.க.,வில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.ராசா திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து ஓட்டு கேட்கிறார். கடந்த தேர்தலில் ராசாவிற்கு வாக்களித்து வெற்றிபெறவைத்தீர்கள். ஆனால் அவர் 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்து தமிழக மக்களை தலைகுனிய வைத்தார், 2ஜி ஊழலிலே ரூ.1.76 லட்சம் கோடி என்றால். தற்போது 4 ஜி வரை வந்து விட்டது. இந்த தேர்தலில் அவர் ஜெயித்தால் ஒட்டு மொத்த நாட்டையும் அவரது குடும்பத்திற்கு பிரித்துக் கொடுத்து விடுவார். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ராசா டெல்லியில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவருக்கு டெல்லி திஹார் ஜெயிலில் நிறை நண்பர் இருக்கின்றனர்.

ஒரு தேர்தல் வந்தால் கட்சி அலுவலகத்தில் சீட்டு கேட்டு வருவார்கள். ஆனால் காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுத்துவிடாதீர்கள் என்று கேட்டு வருகின்றனர். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் காங்கிரஸ் கட்சியை நாட்டே விட்டே விரட்ட வேண்டும். 

அம்மாவை நம்பினால் ஆண்டவனை நம்பியமாதிரி. ஆகையால் 40 தொகுதிகளிலும் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெறச்செய்தால் தமிழகத்திலிருந்து சென்று இந்தியாவை காப்பற்ற முடியும். எனவே உங்கள் தொகுதியில் உங்களுக்காக உழைக்க காத்திருக்கும் கழக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்ஹி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் கலைசெல்வன், வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன், நகர செயலாளர் தேவராஜ், ஊட்டி ஒன்றிய செயலாளர் குமார், நகர்மன்ற தலைவர் சத்யபாமா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, நகர்மன்ற துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் டி.சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் பால நந்தகுமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், பாசறை மாவட்ட செயலாளர் வினோத்,  உட்பட ஏராளாமான அ.தி.மு.க.,வினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்