முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 சாமி சிலைகள் வெளிநாட்டில் விற்பனை: போலீசார் விசாரணை

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.10 - 600 ஆண்டுகள் பழமையான, 2 சாமி சிலைகள் தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்டு வெளிநாட்டில் ரூ.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

அந்த சாமிசிலைகளை மீட்க சிலை திருட்டு தடுப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக தமிழக சிலை திருட்டு தடுப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:_

தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட இரண்டு துவாரபாலகன் சிலைகள், வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டு, அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த இரண்டு சிலைகளும், 600 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் ஆகும். இந்த சிலைகள் வெளிநாட்டில் ரூ.3 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்த கோவிலில் இருந்து, இந்த சிலைகள் திருடப்பட்டன, என்பது தெரியவில்லை.

அந்த சிலைகளின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.பிரதீப் வி பிலிப் மேற்பார்வையில், சிலை திருட்டு தடுப்பு போலீஸ் டி.ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

படத்தில் காணப்படும் சிலைகள் பற்றி தகவல் இருந்தால், உடனே சென்னை அண்ணாநகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வளாகத்தில், 2_வது அவென்யூவில் செயல்படும் சிலை திருட்டு தடுப்பு போலீசாருக்கு

044_26220331, 044_26220332 என்ற தொலைபேசி எண்களில் பேசி தகவல் தெரிவிக்கலாம். இந்த இரண்டு சிலைகளையும் மீட்டு, தமிழகத்திற்கு கொண்டுவரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்