முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை - திருவனந்த புரத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.12  - திருவனந்தபுரம்_சென்னை சென்டிரலுக்கு (வண்டி எண்: 06312) வரும் 23_ந்தேதி முதல் 30_ந்தேதி வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:_

திருவனந்தபுரம்_சென்னை சென்டிரலுக்கு (வண்டி எண்: 06312) வரும் 23_ந்தேதி முதல் 30_ந்தேதி வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருவனந்தபுரத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.10 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

அதேபோல மறுமார்க்கமாக, சென்னை சென்டிரல்_திருவனந்தபுரத்திற்கு (06311) வரும் 24_ந்தேதி முதல் மே 1_ந்தேதி வரை வியாழக்கிழமைகளில், சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை சென்டிரலில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு, திருவனந்தபுரத்தில் 13_ந்தேதி தொடங்கி 20_ந்தேதி வரையும், சென்னை சென்டிரலில் 14_ந்தேதியும் தொடங்கி 21_ந்தேதி வரையும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு ரெயில் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், பாலக்காடு மற்றும் கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நெல்லை_சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில் (06746) வரும் 25_ந்தேதி முதல் மே 2_ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

இதே போல், சென்னை சென்டிரல்_நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (06745) வரும் 25_ந்தேதி முதல் மே 2_ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு நெல்லையை சென்றடையும். 

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு வரும் 15_ந்தேதி தொடங்கி 22_ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சேலம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவுக்கு, சாதாரண கவுண்ட்டரில் டிக்கெட் எடுக்க முடியாது. ஆன்_லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

மேலும் ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். காத்திருப்போர் பட்டியல் இந்த ரெயில்களுக்கு கிடையாது. 'தட்கல்' முன்பதிவு டிக்கெட் விலையை போலவே சாதாரண டிக்கெட் விலை இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்