முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயற்கை மின்தட்டுப்பாட்டை ஏற்ப்படுத்தி சதித்திட்டம்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.12 - தமிழகத்தில் மின்சார உற்பத்தி நிலையங்களில் அடிக்கடி பழுதை ஏற்படுத்தி சிலர் சிலர் செயற்கையான மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த சதிகாரர்கள் யார் என்பதை நான் கண்டித்து அவர்களை தண்டிப்பேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பாளையங்கோட்டையிலநேற்று நடைபெறும் பிரசார கூட்டத்தில் முதல்_அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:_

இன்று தமிழகமெங்கும் மின்சார நிலைமை பற்றிய பேச்சு நிலவுகிறது.  திடீரென்று மின் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது.  மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது என்று பலரும் பேசுகின்றனர்.  இதையே ஒரு குறையாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.  இதைப் பற்றி சில விளக்கங்களை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.  

இதற்கு முன்பு இரண்டு முறை நான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.  1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் நான் முதலமைச்சராக இருந்திருக்கிறேன்.  எனது முந்தைய ஆட்சிக் காலங்களில் மின் விநியோகம் சீராக இருந்தது.  எனது முந்தைய ஆட்சிக் காலங்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை; மின்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.  மாறாக, எனது முந்தைய ஆட்சிக் காலங்களில் தமிழகத்தின் தேவை போக, உபரியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால் பிற மாநிலங்களுக்கு அதனை விற்று வருவாயும் <ட்டினோம்.  ஆனால், 2006_க்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.  இதனை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.  

2006_ல் தேர்தல் நடைபெறும் வரை, ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை, நான் ஆட்சியை விட்டுப் போகும் போது, தமிழ் நாடு மின்சார உற்பத்தியில் உபரி மாநிலமாகத் தான் இருந்தது.  அதன் பின்னர், திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்திய காலத்தில் தான், 2006 முதல் 2011 வரையில் உள்ள மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் தான் மின் நிலைமை மிகவும் மோசமடைந்தது.  

எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு எனது ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தங்கள் போடப்பட்ட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட புதிய மின் திட்டங்களை எல்லாம் 

. கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, இவைகள் எல்லாம் ஜெயலலிதா தொடங்கிய திட்டங்கள் என்பதற்காக கிடப்பில் போட்டுவிட்டார். அந்தத் திட்டங்களை நிறைவேற்றவில்லை.  அதனால், 2007 வரை நிலைமை சரியாக இருந்தது.  2008_க்குப் பிறகு மின்பற்றாக்குறை ஏற்பட்டது.  மின் உற்பத்தி குறைந்தது.  அதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது.  தமிழகமே இருளில் மூழ்கியது.  இந்த நேரத்தில் ஒன்றை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மின்சாரத்தின் அளவு 8,000 மெகாவாட்.  தற்போது, எனது ஆட்சிக் காலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தின் மொத்த அளவு 12,000 மெகாவாட்.  ஆக, மின்சார பற்றாக்குறை என்ற நிலைமை இல்லை.  தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  பிறகு ஏன் இந்த நிலைமை?  அதற்கு மீண்டும் வருகிறேன்.

திமுக ஆட்சிக் காலத்தில் எதிர்கால மின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்களின் தேவைகளைப் பற்றி கவலைப்படாமல், புதிய திட்டங்கள், புதிய மின் உற்பத்தித் திட்டங்களை துவங்காமல் விட்டுவிட்டதால், படிப்படியாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது.  

2008 முதல் 2011 வரை ஒவ்வொரு ஆண்டும் மின் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது.  தமிழகம் இருளில் தள்ளப்பட்டது.  உங்கள் எல்லோருக்கும் நன்றாக நினைவிருக்கும்.  நீங்களெல்லாம் அதனை அனுபவித்திருக்கிறீர்கள்.  அந்தத் துன்பத்தை அனுபவித்திருக்கிறீர்கள்.  2011_ல் மீண்டும் நான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, ஒட்டு மொத்த மின் பற்றாக்குறை 4,000 மெகாவாட்டாக இருந்தது.  ஆகவே, எப்படியாவது இந்த நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.  அதுமட்டுமல்ல, திமுக ஆட்சிக் காலத்தில், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில், சீராக நடைபெற்றுக் கொண்டிருந்த, செயல்பட்டுக் கொண்டிருந்த மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாம் வேண்டுமென்றே பராமரிப்பின்றி விட்டு, பழுதடையச் செய்து அதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி, கமிஷன் சம்பாதிக்கலாம் என்பதற்காகவே திட்டமிட்டே இந்த மின் பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது.  அதனால், மின்சார வாரியத்திற்கு 50,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது.  

நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள அனைத்து நிதி நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் உத்தரவிட்டது.  தமிழக மின்சார வாரியத்திற்கு கடன் அளிக்கக் கூடாதென்று.  அப்படிப்பட்ட மோசமான நிலைமையில் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றேன்.  அப்போது நான் ஒரு சபதம் செய்தேன்.  வெளிப்படையாகவும் சொன்னேன்.  இந்த மோசமான மின்பற்றாக்குறை நிலைமையை நான் சரிசெய்தே தீருவேன் என்று உறுதி அளித்தேன்.  அதன்படி பகீரத முயற்சிகளை மேற்கொண்டேன்.  படிப்படியாக தமிழக அரசே பொறுப்பேற்று அந்தக் கடன்களையெல்லாம் அடைத்துக்கொண்டு வந்தோம்.  புதிய மின் திட்டங்களைத் துவங்கினோம்.  வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வரவழைத்தோம்.  நான் ஏற்கெனவே சொன்னது போல, திமுக ஆட்சிக் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு 8,000 மெகாவாட் தான்.  ஆனால், இப்போது எனது ஆட்சிக் காலத்தில் 12,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  அதற்கு மேல் மக்கள் தேவைக்கேற்ப வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது.  

ஆகவே, கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதம் வேளையில் நிலைமை சீர்செய்யப்பட்டுவிட்டது.  அப்போது மின் வெட்டே இருக்கவில்லை.  இதனை கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் நான் பெருமிதத்துடன் தெரிவித்தேன்.  சட்டமன்றத்தில் கூறினேன்.  இப்படிப்பட்ட ஒரு மோசமான சழ்நிலையில் ஆட்சிக்கு வந்த பிறகு, பகீரத முயற்சி எடுத்து எனது ஆட்சி, எனது அரசு வெற்றிகரமாக நிலைமையை சமாளித்துவிட்டது.  மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் உள்ள அந்த இடைவெளியை நாங்கள் கடந்துவிட்டோம்; சரிசெய்துவிட்டோம்; இனிமேல் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது.  இந்த சாதனையை நாங்கள் புரிந்திருக்கிறோம் என்று அறிவித்தேன்.  நான் சொன்னது தான் தாமதம்.  அதன் பிறகு சில நாட்களுக்குள் ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வந்தது.  அந்த நேரத்தில், சொல்லி வைத்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிற மின் நிலையங்கள் எல்லாம் பழுதடைந்துவிட்டன.  சொல்லி வைத்தாற்போல அத்தனை மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் பழுதடைந்துவிட்டன. அதனால் கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டது.  அப்போதே, ஏற்காடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்ட போது நான் வெளிப்படையாக சொன்னேன்.  சதித் திட்டம் நடக்கிறது.  வேண்டுமென்றே மின்உற்பத்தி நிலையங்களை பழுதடையச் செய்திருக்கிறார்கள்.  ஆகவே, நிலைமையை சரிசெய்வோம் என்று சொன்னேன்.  அதன் பிறகு ஓரளவுக்கு நிலைமை சரிசெய்யப்பட்டது.  ஆனால், அதற்குள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது.  

ஆகவே, வாக்காளப் பெருமக்களே, நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.  இன்று மின் பற்றாக்குறை என்ற நிலைமை தமிழ் நாட்டில் இல்லை.  மக்கள் தேவைக்கேற்ப மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  12,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  அதற்கு மேல் தேவைப்பட்டால் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.  ஆகவே, மின் பற்றாக்குறை இல்லை.  தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  அப்படியானால், அடிக்கடி மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது? திடீரென்று இரண்டு மின் நிலையங்கள் ஒரு நாளில் பழுதடைந்துவிடுகிறது.  இதனால் கிட்டத்தட்ட 1,000 மெகாவாட், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி குறைகிறது.  அந்த நேரத்தில் தமிழகமெங்கும் மின் வெட்டு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த நிலையங்களை சரிசெய்கிறோம்.  அதன் பின்னர், இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து விடுகின்றன.  ஏதோ ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.  டிரிப் ஆகிவிட்டது; கன்வேயர் பெல்ட் அறுந்துவிட்டது; திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுவிட்டது என்று சொல்லுகிறார்கள்.  மீண்டும் அதை சரி செய்கிறோம்.  அதை சரி செய்த உடனேயே மறுபடியும் வேறு ஏதாவது ஒரு மின் நிலையத்தில் இப்படி பழுது ஏற்படுகிறது.  நானும் யோசித்துப் பார்த்தேன்.  நான் ஏற்கெனவே இரண்டு முறை முதலமைச்சராக இருந்திருக்கிறேன்.  எனது முந்தைய ஆட்சிக் காலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் இப்படி தினசரி பழுதடையவில்லை.  மின் உற்பத்தி நிலையங்களில் தினசரி இப்படி பழுதுகள் ஏற்படாது; தவறுகள் ஏற்படாது.  ஆகவே, திட்டமிட்ட சதி நடைபெறுகிறது என்று இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  செயற்கையான ஒரு மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி வேண்டுமென்றே மின் உற்பத்தி நிலையங்களில் இத்தகைய பழுதுகளை ஏற்படச் செய்து, அதன் காரணமாக செயற்கையான மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி மின்வெட்டு செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி, இதன் மூலம் மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மீது அதிருப்தி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இதை செய்கிறார்களோ என்று அனைவரும் இப்போது சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.  எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.  

ஆகவே, ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  தமிழகத்தில் மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.  தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  ஆனால், தினசரி இப்படி மின் உற்பத்தி நிலையங்களில் பழுதுகள் ஏற்படுகின்றன என்றால் இது திட்டமிட்ட சதிதானோ என்று தோன்றுகிறது.  ஆகவே, ஆராய்ந்து, விசாரித்து, பரிசீலித்து இந்த சதி வேலைக்கு, நாச வேலைக்கு யார் காரணம் என்பதை நிச்சயமாக கண்டுபிடித்தே தீருவோம்.  மக்களின் துன்பத்தைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் மின்வெட்டு என்ற துன்பத்தை சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல் வேண்டுமென்றே இப்படி நாச வேலையில் <டுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மின் நிலைமை சீர் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.            

வாக்காளப் பெருமக்களே! மறவாதீர்! வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இதய தெய்வம் புரட்சித்  தலைவர் எம்.ஜி.ஆர்.  கண்ட வெற்றிச் சின்னமாம் +இரட்டை இலை$ சின்னத்தில் வாக்களித்து அவர்களை   மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை உங்களை அன்புடன் வேண்டுகிறேன். 

 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்