முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் ஓபன்: காலிறுதியில் சிந்து - ஸ்ரீகாந்த்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிங்கப்பூர், ஏப்.12 - சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறியுள்ளனர். 

19 வயது இளம் வீராங்கனையான சிந்து, மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் ஷிசுகா யுசாய்தாவை எதிர்கொண்டார். இதில் 21-17, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். காலிறுதியில் உலகின் 3-வது நிலை வீராங்கனையான சீனாவின் யியாங் வாங்கை சிந்து இன்று எதிர்கொள்கிறார். இது அவருக்கும் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். 

ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஹாங்காங்கின் யூன் ஹுவை எதிர்கொள்கிறார். யூன் ஹுவை ஸ்ரீகாந்த் ஏற்கெனவே ஒருமுறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகளால் இரண்டாவது சுற்றைக் கூட தாண்ட முடியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago