முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 யூனிட் தொடங்க இந்தியா - ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.13 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ. 33 ஆயிரம் கோடி செலவில் 3 மற்றும் 4வது யூனிட் தொடங்குவது தொடர்பாக இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவன மான இந்திய அணு மின்சார கழகமும் (என்.பி.சிஐ.எல்) ரஷிய அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அதிகார வட்டா ரங்கள் தெரிவித்தன.

எனினும் திட்டப்பணிகளை தொடங்குவதற்கு முன் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத் திடமிருந்து சில அனுமதிகளைப் பெற வேண்டும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் முதல் யூனிட்டில் அணுமின்சாரம் உற்பத்தி தொடங்கிவிட்டது. 2-வது யூனிட்டிலும் விரைவில் மின்சார உற்பத்தி தொடங்கி விநியோகிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யா சென்றபோது, ஒப்பந்தம் செய்துகொள்ள திட்டமிடப் பட்டிருந்தது. என்றாலும் அணுஉலை விபத்து இழப்பீடு தொடர் பாக உடன்பாடு ஏற்படாததால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்பிரச்சினை சுமுகமாக தீர்க்கப் பட்டு இரு நாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்