முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்தன் டாடாவுக்கு பிரிட்டன் விருது

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

லண்டன், ஏப்.13 - டாடா குழுத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுக்கு பிரிட்டன் அரசி எலிசபெத், அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளார். இந்திய-பிரிட்டன் உறவில் மேம்பாடு, பிரிட்டனில் அதிக முதலீடு மற்றும் மனித நேயப் பணி ஆகியவற்றில் சிறப்பான் சேவையாற்றியதற்காக, 2014-ஆம் ஆண்டுக்கான உலக வர்த்தக சிறப்பு விருதை ரத்தன் டாடாவுக்கு வழங்க அரசி ஒப்புதல் அளித்துள்ளதாக பிரிட்டனில் உள்ள வெளிநாடு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் கௌரவ விருதை 2014-ஆம் ஆண்டில் பெறுபவர்களில் 76 வயதான டாடாவும் ஒருவர்.

பிரிட்டனுடனான பொருளாதாரம் மற்றும் கலாசார உறவைுகளை மேம்படுத்த சேவை புரிந்து ஜப்பான் மற்றும் கிரேக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த விருதுக்கு தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மேற்கு மிட் லண்டனஸ் பிராந்தியத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தொழிற்சாலையை நிறுவ 50 கோடி பவுண்ட் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்