முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை: ஹீனா சிந்து தங்கம் வென்று சாதனை

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மியூனிச், ஏப்.13 - ஜெர்மனி நாட்டில் மியூனிச் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹினா சிந்து பங்கேற்றார்.

 நேற்றைய முன்தினம் நடந்த இறுதிபோட்டியில் பலமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற உக்ரைன் வீராங்கனை ஒலேனா கோஸ்டேவிச், உலக சாம்பியனான செர்பியாவின் அருனோவிச் சோரனா, இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் கோவென்ஜும் ஆகியோரின் கடும் சவாலை இந்தியாவின் ஹினா சிந்து மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதில் அனைவரையும் முறியடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் ஹினா சிந்து. 

துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் உலக சாம்பியன்சிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவர் இதன் மூலம் பெற்றுள்ளார். துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தையும் அவர் பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்