முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ரஜினிகாந்த்துடன் நரேந்திர மோடி நேரில் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஏப். 14 - பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்து சேர்ந்தார்.  அவர் போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.  நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்பு அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசி ரஜினிகாந்த், நரேந்திரமோடி எனக்கு ஏற்கனவே பழைய நண்பர் ஆவார். அவர் எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது என்னை சந்தித்தார். அப்போது நான் அவரிடம் என் வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அதனால்தான் அவர் என்வீட்டிற்கு வந்தார். 

என் வீட்டில் அவருக்கு தேனீர் கொடுத்தேன், அதனை அருந்திவிட்டு சென்றார். என் உடல்நிலை பற்றி விசாரித்தார். எங்களின் சந்திப்பு அரசியலுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தார். 

இந்த சந்திப்பின்போது தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் இல.கணேசன் மற்றும் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்