முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூம்பாறை ஸ்ரீ குழந்தை வேலப்பர் கோயில் காவடி திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

கொடைக்கானல், ஏப்.14 - திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறை கிராமத்தில் வீட்டிறிருக்கும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலைச் சார்ந்த பூம்பாறை ஸ்ரீ குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று 24_ம் ஆண்டு காவடி திருவிழா அதிவிமர்சியாக நடைபெற்றது.

இது குறித்த விபரம் வருமாறு:_

தமிழ்நாட்டு சுற்றுலாத் தளங்களில் ஒன்றான, மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் வட்டத்தில் அமைந்துள்ளது பூம்பாறை கிராமம். இது கொடைக்கானலில் இருந்து சுமார் 18 கிலோ மீட்ர் தொலைவில் அமைந்துள்ளது. இது மற்ற கிராமங்களின் தாய் கிராமம் என்று அழைக்கப்படும். இங்கு வீட்டிருக்கும் பூம்பாறை ஸ்ரீ குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று 24_ம் ஆண்டு காவடித் திருவிழா அதிவிமர்சயாக கொண்டாடப்பட்டது.

இங்கு பாரம்பரிய விழாவாக பங்குனி திருவிழா கொண்டாடப்பட்டு கொண்டாடப்பட்டது. வருடம் தோறும் புலகட்டி விடுதல், மணி கட்டிவிடுதல் என்று மாடுகளை விரட்டி (ஜல்லிக்கட்டு நடத்தி) பொதுமக்கள் திருவிழாவாக கொண்டாடி வந்தனர். இங்கு குழந்தை வேலப்பர் கோயில் இருந்தும், இக்கோயிலில் நடைபெறும் காவடி திருவிழா இல்லாமல் முன்னோர் வரைமுறைப்படிதிருவிழா நடைபெற்று வந்தது. இங்கு 4 அல்லது 5 வருடங்களுக்கு ஒருமுறை பெருவிழா எடுத்து நடத்துவார்கள். அதில் கீழ்மந்தையில் சாமி ஆட்டம், தமிழர்களின் பாரம்பரிய ஆட்டமான வட்டாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், மான்கூத்து, புலியாட்டம், குதிரையாட்டம் என 8 நாட்கள் ஓவி விட்டு ஊர்பொதுமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.

இவ்வாறு முன்னோர் வரை முறைப்படி கொண்டாடி வந்த இவ்வூரில் முதன் முதலாக குருசாமி டி.ஆர்.முருகன் முயற்சியில் முருகனின் அவதாரமான குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. அதனால் காவடி எடுத்து வழிபாடு நடத்தி கொண்டாடுவோம் என்று ஊர்பொதுமக்களிடம் கூற, ஊர்பொதுமக்கள் முடிவின்படி 1990_ம் வருடம் முதல் மாற்றப்பட்டு உத்தரம் அன்று காவடி எடுத்தும், கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு கொண்டாடப்படும் இந்த பங்குனி உத்திர காவடி திருவிழா 24_ வருடமாக நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழா கடந்த 10_ம் தேதி (வியாழக்கிழமை) புலகட்டி விடுதல் துவங்கியது. நேற்று முன்தினம் மணி கட்டி விடுதல் (மாடுகளுக்கு மணி கட்டி, கொம்பில் கொப்பரை சூடி அழகு படுத்தி ஜல்லிக்கட்டு நடத்துவது) நடைபெற்றது. நேற்று காலை குருசாமி டி.ஆர்.முருகன் தலைமையில் கொடிமுடியில் இருந்து டி.ஆர்.விஜயன், எம்.ஆர்.பாலகிருஷ்ணன், கோபால் மற்றும் பக்தர்கள் தீர்த்தம் கட்டிகொண்டுவந்ததையும், உத்திர காவடியையும் எடுத்து வந்து குழந்தை வேலப்பர் கோயிலில் அபிஷேகம், ஆராதனை நடத்தி வழிபட்டனர். 13_வது ஆண்டாக பெரியகுளத்தில் இருந்து பாதையாத்திரையாக பக்தர்கள் வந்தும், அன்னதானம் வழங்கியும் சிறப்பித்தனர்.

இன்று கருணபத்திரன் கோயிலில் பொங்கலிட்டு, மாலையில் மாடு விரட்டி (ஜல்லிக்கட்டு) இரவு அவரவர் குலதெய்வங்களுக்கு படையலிட்டு வழிபடுவார்கள். அதன்பின் 4 அல்லது 5 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஓவி விடுதல் இந்த வருடம் நடைபெறுகிறதா? என்பது முடிவு செயப்படும். அவ்வாறு முடிவு செய்யப்பட்டால் எட்டு நாட்களுக்கு திருவிழா நடைபெறும். இல்லையென்றால் நாளை மஞ்சள் ஓவி என்று திருவிழா நிறைவு பெறும்.

பாரம்பரியமான பங்குனி பெருவிழாவில் தெய்வமனம் கமழும் குழந்தை வேலப்பர் திருத்தளத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர காவடி திருவிழாவில் கலந்து பக்தர்களுக்கு நன்றி தெரிவித்தும் இன்று நடைபெறும் விழாவில் கலந்து கொண்டும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து அருள்பெருமாறும் கார்த்திகை மன்றம், சஷ்டி திருப்புகழ் மன்றம், பிரதோஷக்குழு, கொடுமுடி தீர்த்தக்குட பக்தர்கள், பழனி பாதையாத்திரை பக்தர்கள், ஊராட்சி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக தமிழ்நாடு கன்ஸ்யுமர் ப்ரொடெக்ஷன் சென்டர் மற்றும் ஐந்தாவது தூண் கொடைக்கானல் வட்டார அமைப்பாளரும், பூம்பாறை தொடக்கப்பள்ளி கிராமக் கல்விக்குழு தலைவருமான டி.பி.நீலகண்டன், வைரவேல் கேபிள்ஸ் டி.பி.டி.கோபால், பூம்பாறை ஊராட்சி மன்றத்தலைவர் தனலெட்சுமி சீனிவாசன், துணைத்தலைவர் சதாசிவம், கவுன்சிலர் மலர்சந்தானம், இந்தியன் டிஜிட்டல் ஸ்டுடியோ காளிமுத்து ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago